Tuesday, June 9, 2009

கோபம் !!

வாரியார் சுவாமிகளும் கோபத்தைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்.

'சூடான பால் ஆற வேண்டும் என்றால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி ஆற்ற வேண்டும்'. அதுப் போல சூடான சூழ்நிலையில் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்.

சரி, இது நம்மை பிறர் கோபப்படுத்தும் போது செய்ய வேண்டியது. ஆனால் நாமும் பிறரைக் கோபப்படுத்துவது போல் ஆகிவிடுகிறதே அப்பொழுது என்ன செய்யவது? அதற்கும் ஒரு வழி சொல்கிறார்.

உலகில் மிக நல்லவன் என்றும், மிகக் கொட்டவன் என்றும் யாரும் இலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். இரண்டையும் தெரிந்துக் கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய் விட்டு சொல்லாமலும், குணங்களை பாராட்டவும் செய்தால் மற்றவரைக் கோபப்படுத்துவதில் இருந்தும் நாம் தப்பித்து விடலாம்.

2 comments:

  1. யதார்த்தம்.

    பதிவும் அருமை.

    ReplyDelete
  2. உண்மைதான்.
    நல்லவன் கெட்டவன் பாகுபாடு நம் எதிர்பார்ப்பில் அமைகிறது .எதிர்பார்ப்பு பூர்த்தியாக வில்லையென்றால் கோபம் வருகிறது.

    ReplyDelete