Tuesday, March 31, 2009

சுய முன்னேற்றக் கட்டுரை

"ஆனால்" என்ற சொல் அதற்கு முன்னால் சொல்லப்பட்டதை எல்லாம் அர்த்தம் இல்லாததாக்கி விடுகிறது. உதாரணத்திற்கு நாம் அன்றாடம் சொல்லக் கூடிய சில-

"நான் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ஆனால் இப்படி அதிகாலையில் குளிராக இருப்பதால்........" (இன்று உடற்பயிற்சி செய்யப் போவதில்லை என்று பொருள் காண்க).

"கோபப்படுவது நல்லதில்லை தான். ஆனால் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் கோபப்படாமல் இருப்பதெப்படி?" (கோபப்படுவது நல்லதில்லை என்பது வெறும் சம்பிரதாயத்திற்காக சொல்லப்பட்டிருக்கிறது).

"செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் நேரமே கிடைக்கிறதில்லை" (அதனால் நான் ஒன்றுமே செய்வதில்லை).

இதில் எல்லாம் ஆனால் என்று சொல்வதற்கு முன்னால் சொன்ன அத்தனை நல்ல விஷயங்களும் நடைமுறைக்கு வராத வெறும் வெற்று வார்த்தைகளாகி விட்டது என்பது தெளிவாகத் தெரிகிற உண்மை.

சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் உடற்பயிற்சி செய்திருப்பேன், எல்லோரும் ஒழுங்காக நடந்து கொண்டால் கோபமே பட மாட்டேன், நாளுக்கு 24 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் எதையும் செய்து முடிப்பேன் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பொய்கள். நம் சோம்பேறித்தனத்தையும், கட்டுப்பாடற்ற மனதையும் மறைக்கும் ஆயுதம் தான் இந்த "ஆனால்".

இந்த 'ஆனால்" நம்மை சமாதானப் படுத்திக் கொள்ள உதவலாம். ஏமாற்றிக் கொள்ள உதவலாம். ஆனால் இந்த 'ஆனால்' நம்மை என்றும் பின் தங்கியே இருக்க வைக்கும். சாதிக்காத சப்பைக்கட்டு மனிதர்களாகவே நம்மை இருத்தி விடும்.

நீங்கள் சொல்லத் துவங்கும் 'ஆனாலி'ல் வலுவான காரணங்கள் கூட இருக்கக்கூடும். ஆனால் எல்லாமே சாதகமாக இருக்கும் போது சாதிப்பதில் சிறப்பென்ன இருக்கிறது? தடைகளையும் சாதகமில்லாத சூழ்நிலைகளையும் மீறி மன உறுதியுடன் சாதிப்பதில் அல்லவா மகத்துவம் இருக்கிறது.

எனவே "ஆனால்" என்ற சொல்லை உபயோகப்படுத்தும் போதெல்லாம் எச்சரிக்கையுடன் இருங்கள். அந்த சொல்லைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். சொல்லும் போது உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அடுத்தவர்களை நம்ப வைக்க முயல இந்த 'ஆனால்'ஐப் பயன்படுத்தி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்

கோபத்தைக் களைவது எப்படி?

லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.

அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.

கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.

இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.

அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.

அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம்.

எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.

இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.

கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.

எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தகைளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

Monday, March 30, 2009

என்ன பொழப்புடா……..

பக்கத்து வீட்டுக்காரனை எதேர்ச்சியாக சந்திக்க
சிரிச்சுகிட்டே சொன்னான்
உனக்கென்ன பா software engineer….

car bungalow கை நிறைய சம்பளம்
வாழ்க்கைய வாழற………

சொன்னவன் முகத்துக்கு நேரா சொல்ல ஆசைபட்டன்

அட போடா…………..

பெத்தவங்கள பார்க்க முடியுல
பெத்ததுங்களையும் பார்க்க முடியுல
கொண்டவளை இரசிக்க முடியுல
கொண்டதுகளையும் இரசிக்க முடியுல….

சூரியன பார்த்து சில காலம் ஆயிடுச்சு
சுத்தமான காத்த சுவாசிச்சு சொற்ப காலம் ஆயிடுச்சு
அம்மா கையால சாப்ட்டு பல வருஷம் ஓடிடுச்சு
அகமுடையாள் அன்பா போட்ட சோறு மறந்தே போய்டுச்சு….

Cafe-Day Burgerum, cokeum தான்
சோறு தண்ணினு ஆயிடுச்சு ……..

மல்லாந்து நிம்மதியா படுத்துறங்க நேரம் இல்ல
கல்லாயணம் கார்த்திகனு ஒரு விழாக்கும் போக முடியுல
இந்த அதிக கூலிக்கு மாறடிக்கற கொத்தடிமை வாழ்கைல…

தலைவலியும் காய்ச்சலும் மட்டும் இல்ல … எங்க
வாழ்கையும் அவனவனுக்கு வந்தா தான் தெரியும்…..

பொழப்புக்காக இந்த பொட்டிய தொட
பொழப்பே இதுவாச்சி…..
கடுவுள பார்த்தா கை கூப்பி வேண்டிபேன்
போதும்டா சாமி.. அடுத்த பிரவியலயாவது
என் பொழப்புக்கு வேற வழி காட்டு ……

என் சோகத்த கொட்டிபுட்டு அத கணினியில் பதிஞ்சுபுட்டு
மறுபடியும் கிளம்பிட்டன் பொழப்ப பார்க்க….

என்ன செய்ய போழபாச்………சே!!!!!!!!!

Monday, March 23, 2009

சிந்தித்து செயல்படுங்கள்!

ஒரு ஊரில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்நாளில் ஒரு பொய் கூட சொன்னதில்லை. எப்போதும் உண்மையை மட்டுமே பேசிய அவரை எப்படியும் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று ஒரு சிறுவன் முடிவு செய்தான். அதன்படி ஒரு நாள் ஒரு சிறிய பறவையை அந்த சிறுவன் தன் கைகளில் மறைத்துக் கொண்டு அந்த முதியவரிடம் வந்தான்.

அந்த சிறுவன் அந்த முதியவரைப் பார்த்து தான் மறைத்து வைத்திருக்கின்ற கைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர் ஏதாவது பூச்சியோ, புழுவோ அல்லது பறவையோ இருக்கலாம் என்றார். முதல் கேள்வியை சரியாக சொன்ன முதியவரிடம் இரண்டாவது கேள்வியைக் கேட்டான் அந்த சிறுவன். தன் கையிலிருந்த பறவை உயிரோடு இருக்கிறதா அல்லது இறந்து கிடக்கிறதா என்று கேட்டான். அந்த முதியவர் பறவை உயிரோடு இருக்கிறது என்றால் அதனைத் தன் கைகளாலேயே அழுத்திக் கொன்று விடலாம். இறந்து கிடக்கிறது என்று சொன்னால் பறவையைப் பறக்க விடச் செய்து விடலாம் என்று நினைத்தான். இந்த கேள்விக்கு முதியவர் எப்படியும் பொய் சொல்லி விடுவார் என்று நினைத்தான்.

ஆனால் அதற்கு அந்த முதியவர் என்ன சொன்னார் தெரியுமா?. சற்றே சிந்தியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் கீழே செல்லுங்கள்.
.
.
.
.
.
.
அதற்கு அந்த முதியவர் அந்த சிறுவனைப் பார்த்து "தம்பி அந்த பறவை உயிருடன் இருப்பதும் இறந்து போவதும் உன்னுடைய கைகளில் இருக்கிறதப்பா" Its all in your hand என்று சொன்னார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். அதனை கேட்டு அந்த சிறுவன் அந்த முதியவரின் அறிவுக் கூர்மையை எண்ணி தலை குனிந்தான்.

பின் குறிப்பு:

ஒரு செயலைத் தொடங்கும் முன்பு நன்கு யோசித்து தொடங்குங்கள். அதே மாதிரி ஒன்றைப் பேசும் முன்பு மிகச் சரியாக பேச கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லது. அது உங்களை த
ர்ம சங்கடத்தில் ஆழ்த்தாது. நன்றி.

Thursday, March 19, 2009

அன்பாக இருப்பதுதான் அன்பு

அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.

சிலரிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணம் இதுதான். அன்பாக இருப்பதிலும் அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் எப்போதும் சந்தோஷ உணர்வு ஏற்படுகிறது.


அன்பு என்பது என்ன ?


பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது. மேலும், எந்த அளவிற்கு ‘அன்பு‘ ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மலினப்படுத்தப்பட்டும் உபயோகத்தில் இருக்கிறது.


அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல், பாசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.


சரி, அன்பு என்பது ஒரு கருத்தா ? அல்லது தத்துவம் என்று சொல்லலாமா ?

நான் சந்தோஷத்தை விரும்புகிறேன்.

கடவுள் அன்பாக இருக்கிறார்.

நான் உன்னை காதலிக்கிறேன்.

என்னுடைய தாயை நேசிக்கிறேன்.


இவையெல்லாம் என்ன...?

அன்பை வெளிப்படுத்துகிற பல்வேறு வார்த்தைகள். அன்புதான் இவ்வார்த்தைகளின் மையம். அன்பு எங்கே கிடைக்கும்... எங்கு வாங்கலாம்... அன்பை செலுத்த முடியுமா...?


அன்பைப் பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு. அன்பு என்ற உணர்வு உள்மனதிலிருந்து எழ வேண்டியது. சந்தோஷத்தை விரும்புவதும், கடவுள் அன்பாக இருப்பதும், காதலிப்பதும், தாயை நேசிப்பதும் உணர்வுபூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டும்.


கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் ? கடவுள் எந்த துன்பத்தையுமே நமக்கு தரமாட்டார். நாம் மட்டும்தான் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர் என்றில்லை.


கடவுள் நம் மீது அன்பாக இருக்கிறார் என்று நாம் நம்புவதன் மூலம் எல்லா செயல்களிலும் பய உணர்வு நீங்கி செயல்பட உத்வேகம் பிறக்கிறது.


‘உயிர்களிடத்தில் அன்பு செய்‘ என்று சொல்லியிருக்கிறார்கள். கடவுளிடம் மட்டும்தான் என்றில்லை. எல்லோரும் நம் மீது அன்பாக இருக்கிறார்கள் என்ற நல்ல மனநிலையைக் கொண்டால் வாழ்க்கை இனிதாக அமையும்.


நான் கடவுள் மீது அன்பாக (பக்தியாக) இருக்கிறேன் என்று சிலர் கூறுவார்கள். இதைவிட போலியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும் ?


எப்போது நாம் கடவுளை வழிபடத் தொடங்குகிறோமோ, அதாவது, அன்பு செலுத்தத் தொடங்குகிறோமோ அப்போதே நாம் நம்மையே நாம் வழிபடத் தொடங்கி விட்டோம் என்றுதானே அர்த்தம் ? நம் மீது நாமே அன்பு செலுத்திக் கொள்வதுதான் வழிபாடு. அதற்கு புனையப்பட்ட நம்பிக்கை வேண்டியிருக்கிறது.


எனவே, அதை நாம் கடவுளின் மீது செலுத்தும் அன்பு என்று கூற முடியாது. கடவுள் என்பது உணர்வு பூர்வமான ஒரு நம்பிக்கை. எந்த விஷயத்தின் மீதும் கவனத்தைக் குவித்து வழிபடுவதன் மூலம் இது சாத்தியம்தான்.


தன்னம்பிக்கை என்பதுதான் கடவுள் என்பதை உணர்ந்தவர்களுக்கு இது புரியும். சுவாமி விவேகானந்தர் மிக எளிமையாக இதுபற்றிக் கூறுகிறார் “தன்னம்பிக்கை இல்லாதவன் எவனோ அவனே நாத்திகன்“ என்று. நம்பிக்கைதான் கடவுள் என்பதை உணராதவர்கள் மட்டுமே ‘நான் கடவுள் மீது அன்பாக இருக்கிறேன்‘ என்றெல்லாம் கூறுகின்றனர்.


நாம் எல்லோருமே தினசரி பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறோம். அதற்கென பல நாம் பல வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.


பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள உதவும் உத்திகள்தான் தொலைக்காட்சி, கடவுள் வழிபாடு, திரைப்படம், எழுதுதல் இவையெல்லாம். இரண்டரை மணி நேரம் இருட்டில், யாரோ சிலரின் வாழ்வின் சந்தோஷங்களைப் பார்த்து சந்தோஷப்படவும், சோகங்களில் சோகமாகவும் நம் மனது இயல்பாக பழகிவிடுகிறது. அதேபோல்தான் கோயில்களிலும், “எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்“ என்று வழிபாட்டின் போது வேண்டிக் கொள்வதன் மூலம் நம்முடைய பிரச்சனை நம்மிடமிருந்து இறக்கி விடுகிறோம்.


பிரச்சனைகளைப் பேசிப் பகிர்ந்து, பிறரிடம் அன்பாக இருப்பவர்களுக்கு இந்த தப்பித்தல் சாதனங்களின் தேவையிருக்காது. நம் தேவைகளைக் கூறவும் பிரச்சனைகளை பேசவும் கிடைத்த அதிலும் பதில் எதுவும் பேசி விடாத ஒரே சாதனம் கடவுள் என்பதால்தான் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.


மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.


அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?


மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.


காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், சிரிக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உண்மையான அன்போடு சிரித்துப் பேசி இருப்போம் ?


உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்.


அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

வயல் வரப்பு வழியாக ஒருவன் நடநது கொண்டிருக்கும்போது புலியைப் பார்த்து விட்டான். அவன் ஓட புலி துரத்தியது. சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.

புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தின் வேர்களில் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டு எலிகள் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியின் பழம் இருந்தது. ஒரு கையால் வேரைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் பழத்தைப் பறித்து தின்றான். அப்போது அவன் மனதில் “பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது“ என்று தோன்றியது.


இக்கதையில் வருகிற ‘கனியைச் சுவைக்கும் மனிதனின்‘ மனநிலைதான் அன்பின் மூலம் நாம் அடைவது.


எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு.

எங்கோ கேட்டவை

முட்டைய
உள்ள இருந்து உடைச்ச ஜனனம்!!!
வெளிய இருந்து உடைச்ச மரணம்!!!

- டிவி நிகழ்ச்சியில் கேட்டது


கஷ்டத்திலோ இன்பதிலோ இருக்குபோது
நினைக்க வேண்டியது
இந்த நிலையும் கடந்து செல்லும்!!!
- நடிகர் சிவகுமார்


பாசமோ கோபமோ

அலை மாதிரி இருந்ததான் நல்லா இருக்கும்
சுனாமி மாதிரி இருந்தா ரெம்ப கஷ்டம்தான்!!!

- சுயமா யோசிச்சது


இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்,
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்
பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்றுதான்
வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான்

-கண்ணதாசன்

தர்மம்

தர்மம் என்பது வழியில் பார்பவருக்கு சில்லரை இடுவது அல்ல.தர்மத்தை பல வழிகளில் செய்யலாம். படிப்புக்கு உதவுதல்.(வசதி படைத்தவர்கள் இல்லாதவர்க்கு எதாவது ஒருவருக்கு படிப்புக்கு மழுமையாக உதவுதல்.) முதியொருக்கு உதவுதல். .அனாதைகழுக்கு உதவுத்ல். விதவைகள் மருமணம் பக்கத்து வீட்டுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது. இப்படி ஏராளம் சொல்லலாம்.தர்மத்தை பற்றி சொல்லும் தர்மம் தலைகாக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்
. அமெரிக்காவின் பொருளாதற நிலைமை பற்றி சொல்லும் போது அமெரிக்கா திவால்:டவுசர் கிழிந்தது என்ற தலைப்பில் வினவு, வினை செய்!யில் அழகாக எழுதி இருக்கிறார். அமெக்காவை பற்றி சொல்ல வேண்டுமானால் மக்கள் பாவம்.(அரசியல் வாதிகளை தவிர) அரசியல் வாதிகள் கப்ட நாடகம் ஆடி மக்களை ஏமாற்றுகிறார்கள்.இது உலகம் முழுவதும் பொருந்தும்.இது நாட்டை அழிவுபாதைக்கு இட்டு செல்கிறது. இதில் பாதிக்க ப்டுவது அப்பாவி மக்கள் .இதில் ஒபாமாவும் விதி விலக்கு அல்ல.ஈராக்கில் இருந்து இன்னும் மூன்று வருடத்துக்கு ரானுவம் விலக்க படாது என்று கூறிவிட்டார்.இதில் தர்மம் அடிபட்டு விட்டது.
இதில் தீவிரவாதமும் அடங்கும் மும்பை தாக்குதலை ஒரு தனிபட்ட இஸ்லாமியனாசெய்தனான்
பாபர் மசூதீ தனி பட்ட ஒரு இந்துவாலா இடிக்கப்பட்டது குறிப்பிட்ட மதத்தவர்கள் விரும்புவார்கள் என்று அரசியல் வாதிகளும்
தீவீரவாதிகளும் செய்கிறார்கள் இதில் பாதிக்க ப்டுவது அப்பாவி மக்கள்.இதிலும் தர்மம் அடிப்பட்டு விட்டது.

Wednesday, March 18, 2009

கடவுள் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறார்!

ஒரு சமயம் ஒரு நபர் கடவுளிடம் ஒரு மலரையும் வண்ணத்துப் பூச்சியையும் வேண்டினார். ஆனால் கடவுள் அந்த நபருக்கு ஒரு கற்றாளையும், கம்பளிப் பூச்சியையும் அளித்தார். அந்த நபருக்கோ மிகவும் வருத்தம். அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை ஏன் தான் கேட்டதற்கு மாறாக கடவுள் அளித்தார் என்று. பின் கடவுளுக்கு அதிகமான மக்களை காக்கும் பொறுப்பு இருக்கும் என்பதால் அவரை எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டார்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அந்த நபர் கடவுள் வழங்கிய கற்றாளையும், கம்பளிப் பூச்சியையும் பார்க்க சென்றார். என்ன ஆச்சரியம்! அந்த அருவருப்பான, முட்கள் நிறைந்த கற்றாளையிலிருந்து ஒரு அழகிய வண்ண மலர் பூத்திருந்தது. மேலும் அந்த காணச்சகிக்காத கம்பளிப் புழு ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறியிருந்தது.

ஆம். கடவுள் எப்போதும் நமக்கு சரியானவற்றையே செய்கிறார். நமக்கு தவறாக தோன்றினாலும் கடவுளின் பாதை எப்போதும் மிகச் சரியாகவே இருக்கிறது.

நீங்கள் கடவுளிடம் ஒன்று கேட்டு, அவர் வேறு ஒன்று கொடுத்தால் நம்புங்கள் அவரை!

நமக்கு தேவையானவற்றை மிகச் சரியான நேரத்தில் எப்போதுமே கடவுள் அளிப்பார்.

நாம் என்னவெல்லாம் விரும்புகிறோமோ அவை எல்லாமே நமக்கு தேவையானதாக இருக்காது.

கடவுள் எப்போதுமே நம் குறைகளை நிவர்த்திக்கத் தவற மாட்டார். எனவே அவரை எந்தவித சந்தேகமும், முணுமுணுப்பும் இல்லாமல் நம்பிக்கையுடன் தொடருங்கள்!

இன்று முட்களாக இருப்பது நாளை மலராக ஆகிவிடும்!

எவர் தன்னை முழுமையாக கடவுளிடம் நம்பிக்கையாக ஒப்படைத்து விடுகின்றனரோ அவர்களுக்கு கடவுள் எப்போதும் மிகச் சிறந்தவற்றையே அளிப்பார்.

Tuesday, March 17, 2009


தள்ளாத வயதில்
தன்னந்தனியே
தவிடு, உமியை
தரம்பிரிக்கிறாய்.
மக்களாட்சி நடத்தும் நாட்டில்
மகராசி நீ
மங்கிப்போன பார்வையுடன்
மாடு போல உழைக்கிறாய்.

ஓராடை அணிந்து உணவருந்தக்கூடாது -
இது 'ஆசாரக்கோவை'யின் அருள்மொழி.

மேலாடையின்றி நீ ஆக்கும் மோர்க்கூழின் தித்திப்பு
எனக்குள் போக்கும் ஆகாரவேட்கைத் தவிப்பு

வீதியோரம் ஆயிரம் அரைவேக்காட்டு பாஸ்ட் புட் இங்கே
ஆதியிலே நான் ருசித்த ஆயாக்கடை இட்டிலி எங்கே

ஏசி ரூமில் இருந்துகொண்டு கள்ளக்கணக்கெழுதும் திருட்டுக்கூட்டம்
பாசி மணி மட்டும் அணிந்த உன் கள்ளமில்லா உழைப்பைக் கண்டஞ்சும்

நம்பிக்கை :முயற்சி = மரணம்

ஒரு ஊரில் மழைபெய்து கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எல்லோரும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி உயிர்பிழைத்தல் பொருட்டு - ஊரைவிட்டுச் சென்றனர்.

ஒருவன் மட்டும் தெளிவாகச் சொன்னான் - "எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. கடவுள் என்னைக் கண்டிப்பாகக் காபபாற்றுவார். அதனால் நான் இங்கேதான் இருப்பேன்" என்று கூறி ஊரைவிட்டு வெளியே கிளம்ப மறுத்தார். ஊரெங்கும் பண்பலை வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வெள்ள எச்சரிக்கைகள் வந்த வண்ணமே இருந்தன.

மக்கள் அச்சப்பட்டு கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறினர். அந்த ஒருவன் மட்டும் ஊரைவிட்டு வர மறுத்தான். மழை தொடர்ந்து பெய்தது. ஒரு ஜீப் வண்டியில் மீட்புக்குழுவினர் வந்து அவனைப் பார்த்து, 'வண்டியில் ஏறிக்கொள் உயிரைக் காத்துக்கொள்" என்றனர்.

இவனோ "கடவுள் காப்பாற்றுவார்..நீங்கள் போகலாம்", என்றான். அடாது மழை விடாது பெய்தது, ஊரில் இவன் மட்டும் தான் இருந்தான். இப்பொது இவனது மார்பு அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. மீட்புக்குழுவினர் படகில் வந்தனர். இவனருகில் வந்து 'தயவு செய்து படகில் ஏறிக்கொள். உயிரைக்காத்துக்கொள்", என்றனர்.

இவனோ "கடவுள் காப்பாற்றுவார்..நீங்கள் போகலாம்", என்றான். இப்பொழுது வெள்ளநீர் இவனது தோள்பட்டையைத்தாண்டிக் கொண்டிருந்தது.

இறுதிக்கட்ட மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த 'எலிகாப்டர்' ஒன்று இவனை வட்டமிட்டு செய்திகூறியது.'தயவு செய்து எலிகாப்டரில் ஏறிக்கொள். உயிரைக்காத்துக்கொள்", என்று செய்தி தெரிவித்தது. இவனோ "கடவுள் காப்பாற்றுவார்..நீங்கள் போகலாம்", என்றான்.

இடி மின்னலுடன் மழை பிரளயமாக உருவெடுத்தது. இவன் நீர்ரில் முழுவதும் மூழ்கி இறந்தான். விண்ணுலகம் சென்றான். அங்கே கடவுளுடன் தர்க்கம் செய்தான்.

"இவ்வளவு பெரிய வெள்ளத்தில் எல்லோரும் சுயநலமாக கடவுளாகிய உன்னைப் பற்றிக் கருதாமல் வேறு ஊருக்குச் சென்று தஞ்சம் புகுந்தார்கள். நான் ஒருவன் மட்டும் தான் உன்னை நினைத்து உருகி வேறிடம் செல்லாமல் கடவுள் காப்பாற்றுவார் - என்ற ஒரே எண்ணத்தில் இலயித்து இருந்தேன். ஆனால் நீயோ என்னைக் கைவிட்டுவிட்டாயே..இது முறையா?" என்றான்.

கடவுள் சொன்னார் -"அப்படியென்றால் ஜீப், படகு, எலிகாப்டர் - இவற்றை அனுப்பிவைத்து உன்னைக் காப்பாற்ற முயன்றது யார். நான்தானே. நீ என் மீது வெறும் நம்பிக்கை மட்டும்தான் வைத்து இருந்தாய். ஆனால் உயிர்பிழைப்பதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மீட்புக்குழுவை உன் பொருட்டு அனுப்பியது நான். ஆனால் நீ ஒரு சிறு முயற்சிகூட எடுக்காமல் உயிரிழந்தாய்", என்றார்.

நீதி : முயற்சியுடன் கூடிய நம்பிக்கையே வெற்றி தரும்

Monday, March 16, 2009

எயர்டெல் விளம்பரத்தால் ஏமார்ந்தேன்!




எயர்டெல்! பெயரைக் கேட்டவுடனேயே ஞாபகத்துக்கு வருவது அதன் விளம்பரங்கள்தான். ஒவ்வொரு விளம்பரமும் ஒரு கவிதை. அதன் விளம்பரங்களுக்கு இந்தியர்கள் மட்டுமல்ல, இலங்கையில் இருக்கும் நானும், இன்னும் பலரும் அடிமை என்றுகூடச் சொல்லலாம்.

தமிழ்த் தொலைக்காட்சித்துறை பெரிதாக வழற்சியடையாத இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியத் தொலைக்காட்சிகள்தான் புகலிடம். இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளைக் காண்பதற்காகவே மாதம் அயிரம் ரூபாவரை செலவு செய்பவர்கள் இங்கு பலர். அதற்கு நானும் ஒன்றும் விதிவிலக்கல்ல.

அவ்வாறு இந்தியத் தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போது சிலசமயம் அதன் நிகழ்ச்சிகளைவிட அதில்வரும் விளம்பரங்கள் சுவாரசியம் மிகுந்ததாக இருந்துவிடும். அவ்வாறு நான் முதலில் ஈர்க்கப்பட்டது A.R.ரஹ்மான் வந்த எயர்டெல் விளம்பரத்தில்தான். அந்த விளம்பரமும், அதன் இசையும் காண்பவரைக் கட்டிப்போட்டு வைத்துவிடும். அதைத் தொடர்ந்து வந்த எயர்டெல்லின் விளம்பரங்களான தாத்தாவும் பேரனும் தொலைபேசியினூடு செஸ் விளையாடும் விளம்பரம், இந்திய, பாகிஸ்தான் சிறுவர்கள் முட்கம்பிகளுக்கிடையே காற்பந்து ஆடும் விளம்பரம், மற்றும் இப்போது காண்பிக்கப்படும் அந்தச் சிறுவன் தந்தையுடன் உரையாடும் விளம்பரம் போன்றவை மறக்க நினைத்தாலும் மறக்க முடியாதவை.

இவ்வாறு இந்திய எயர்டெல் விளம்பரங்களில் மூழ்கியிருந்த போதுதான் இலங்கையிலும் எயர்டெல் தனது சேவையை வளங்கப் போகிறது என்ற தகவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பத்தாவது நாள் அது தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டபோதும் அன்றே அதன் பரபரப்புத் தொடங்கிவிட்டது. இலங்கைத் தொலைக்காட்சிகளில் சாருக்கான் இலங்கையருக்குக் ஹலோ சொன்னார். இலங்கை கிரிக்கட் வீரர்குமார் சங்ககாரவும் தான் எயர்டெல்லுக்கு மாறிவிட்டதாகவும், அது மிகவும் சிம்பிளான பிளான் என்றும் கூறினார்.



இதற்கெல்லாம் மேலாக ஒவ்வொரு எயர்டெல் முகவர் நிலையங்களுக்கு முன்னும் யாழ்ப்பாணத்துச் சங்கக் கடைகளில் நிற்கும் மக்கள் கூட்டத்தையெல்லாம் தொற்கடிக்கத்தக்கவாறு தமது இலக்கத்தை முன்பதிவு செய்யக் கியூ நின்றது கொழும்பிற்குப் புதிது.



நானும் இந்தப் பரபரப்பால் ஈர்க்கப்பட்டும், ஏற்கனவே எயர்டெல் தனது இந்திய விளம்பரங்களால் ஏற்படுத்திய தாக்கத்தாலும் கம்பஸ்சில் ஓசியாகக் கிடைத்த சிம் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டேன். ( நாமதான் ஓசி என்றால் Oil லும் குடிப்பவர்களாச்சே!).

எயர்டெல் தனது சேவையை ஆரம்பித்தது. கட்டணங்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு குறைவாகவே இருந்தது. பரவாயில்லை என பழைய சிம்மை கழற்றிவிட்டு எயர்டெல் சிம்மை செருகினேன்.

Coverage எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதில் அழைப்பு எடுப்பதற்குள் சம்பந்தப் பட்டவரை நேரிலேயே சந்தித்துவிட்டு வந்துவிடலாம் போல் குதிரைக் கொம்பாக இருந்தது. Incoming முற்றிலும் இலவசம் என்றார்கள். ஆனால் அது வந்தால்தானே? யாரைக் கேட்டாலும் எனக்கு அழைப்பு எடுக்க முடியவில்லை என்றார்கள். கடுப்பானது எனக்கு. மறுபடியும் இப்போது பழைய சிம்தான். எயர்ரெல் என்னை ஏமாற்றிவிட்டது. என்னை மட்டுமல்ல, இன்னும் பல இலங்கையர்களையும்தான்.

ஒருவேளை அதன்மீது வைக்கப்பட்ட அளவுக்கதிகமான எதிர்பார்ப்பால் நிகழ்ந்த ஏமாற்றமாக இது இருக்கலாம். ஆனால் இந்தியாவின் சிறந்த ஒரு நிறுவனத்திடம் இப்படியான சேவைக்குறைபாடுகள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. காலப்போக்கில் இவை நிவர்த்தி செய்யப்படும் என்றாலும், மக்களின் ஆதரவை அது சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். இனி அது ஆரம்பிக்கும்போதிருந்த ஆதரவைப் பெற கடினமாக உழைக்கவேண்டும். இன்னும் சிறிது காலம் எடுத்திருந்தாலும் அது தனது வலையமைப்பை சீராக்கிவிட்டு தொடங்கியிருந்தால் இன்று இலங்கையின் முன்னணி வலையமைப்பாக இருந்திருக்கும். இன்று மூன்றாமிடத்துக்கு முட்டிமோதிக்கொண்டுள்ளது. எயர்ரெல் காற்றுள்ள போது தூற்றிக்கோள்ளத் தவறிவிட்டது.

முடிக்கமுதல் ஒரு பஞ்ச்…….

எயர்டெல்,… Add எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா Outgoing க்குத்தான் Antenna பிடிக்கவேண்டியிருக்கு…..

இந்த பஞ்ச்சை எனது நண்பனான Deva விடம் கூறி எப்ப‍டி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர் outgoing எல்லாம் நமக்குச் சரிவராது. நான் வேணா missed callஎன்று போடலாமா என்று கேட்டார்.

இது எப்படியிருக்கு?

ஆளில்லாத கடையில (ஐ டி கம்பெனி) டீ ஆத்துவது எப்படி ?





அமெரிக்காவில பொருளாதார சரிவு அதனால நிறைய மென்பொருள் கம்பெனிகள மூடிட்டாங்க !! ஆட்குறைப்பு நடவடிக்கைகள் !! சிக்கன நடவடிக்கைகள் !! சம்பளம் கட் !! இப்படி எங்க திரும்பினாலும் படுத்தறாங்கப்பா !! முடியல !! இப்பவே கண்ண கட்டுதே!!

இந்த வாரம் என்ன ஆணி புடிங்கினே?? அப்படின்னு நம்ம மேலாளர் கேட்டா? முதல் வாரத்துல புடிங்கின ஆணியவே சொல்ல வேண்டியிருக்கு. அவரும் சளைக்காம அது போன வாரம் நான் கேட்கறது இந்த வாரம் அப்படின்னு வடிவேல் ரேஞ்சுக்கு நம்மள வெச்சு காமெடி பண்றாரு... அவருக்கும் பெருசா புடுங்க தேவையில்லாத ஆணி எதுவும் இல்லைன்னாலும் நம்ம மேல மட்டும் கொல வெறி !!!


சரி என்னதான் நம்ம செக்யுரிட்டி கேட் திறக்கும்போது
ஆபிசுக்கு வந்திட்டு எட்டு மணி நேரம் கழிச்சு போனாலும் சும்மாவே உட்கார்ந்துட்டு என்ன ஆணி புடுங்கறே? அப்படின்னு நம்ம மேலாளர் கேட்கத்தானே செய்வாரு!!!

இதையெல்லாம் சமாளிக்க என்ன செய்யலாம்னு நம்ம ஆபிசுக்கு பக்கத்தில இருக்கற பார்க்குல மல்லாக்க படுத்து வானத்த பார்த்து யோசிச்சதுல சில யோசனைகள் அருவி மாதிரி கொட்டுச்சு. சரி இதை சமூகத்துக்கு அறிவிச்சிடுவோம்..

1. காலையில ஆபிசுக்குள்ள நுழஞ்சதுல இருந்து மத்தியானம் சாப்பிட போற வரைக்கும் சீட்ட வுட்டு எந்திரிக்காதீங்க. டீ குடிக்க போனா கூட டீய எடுத்திக்கிட்டு சீட்டுக்கு வந்திடுங்க. அப்பத்தான் எல்லாரும் நம்ம பிசியா இருக்கறதா நினைப்பாங்க..

2. வெட்டியா யாரு கிட்டயும் போயி அரட்டை அடிக்க வேணாம் அதுவும் மேலாளர் கண்ணுல படர மாதிரி வேண்டவே வேண்டாம்.


3. ஏதாவது ஒரு ப்ரீ டெஸ்ட் இல்ல ஆபிசுல டிரெனிங் ஏதாவது வந்திச்சுன்னா முத ஆளா போய் நின்னிடுங்க.

4. புதுசா ஒரு டாபிக்க படிச்சிட்டு ஒரு டிரெயினிங் எடுங்க, முக்கியமா மறக்காம டீமுல இருக்கிற ஜூனியர் பசங்களா பார்த்து கூப்பிடுங்க (அவங்கதான், அதிகமா கேள்வி கேட்க மாட்டாங்க ) மறக்காம மேலாளர ஆப்ஷனல் அட்டென்டியா சேர்த்துடுங்க.

5. எல்லாருமே மறந்து போன பழைய பிரச்சினை எதாவது கண்டிப்பா எல்லா புராடக்லயும் இருக்கும், அத தேடி கண்டு பிடிச்சு முடிஞ்சா சரி பண்ணிட்டு நல்ல பேர தட்டிக்கிட்டு போயிடுங்க ( பிரச்சினைய சரி பண்ணினதுக்கு அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க முன்னாடியே சொல்லி தேவையில்லாத பிரச்சினையில மாட்டிக்காதிங்க!!! )

6. முதல்ல இருக்கிற கோட இம்ப்ரூவ் பண்ண எதாவது ஐடியா குடுங்க. பெர்பாமன்ச அதிகப்படுத்த முடியுமான்னு பாருங்க!!!

7. அதிகமா லீவு எடுக்காதிங்க, கடையில ஆளே இல்லையின்னாலும் டீ ஆத்தரது ரொம்ப முக்கியம்.

8. நம்ம புராஜெக்டுக்கு இன்டர்னல் வெப்சைட் பண்றது, பில்ட் டைய்ம குறைக்கறது இப்படி எதாவது நமக்கு நாமே ஆணிகளை ஏற்படுத்திக்க வேண்டியதுதான்.


9. அடிக்கடி மேலாளர் கிட்ட போய் அடுத்த வேல எப்ப வருதுன்னு கேட்டு , நமக்கு வேல இல்லன்னு ஞாபகப்படுத்தாதிங்க.

10. பெரிய தலை யாராவது வந்தா ஊர் கூட்டம (all hands meet, town hall meet,etc) போடுவாங்க இல்லையா ? அதுக்கு தவறாம போயிடுங்க!! அப்பதான் கப்பல் எப்ப மூழ்கப்போகுதுன்னு தெரியும்.


இதெல்லாம் ஒரு ஐடியாதான்.. இதுக்கெல்லாம் தேவையில்லாம கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகி நிறைய ஆணி புடுங்கற வேல எல்லோருக்கும் கிடைக்கணும்னு ஆத்தாவ வேண்டிக்கிட்டு ஒரு குலவைய போடுங்க.. சீக்கிரமா கண்ணை தொற ஆத்தா !!!! உ லு லு லு லு !!!!!!

கொஞ்சம் காமெடியா எழுதலாம்னு ஆரம்பிச்சு கடைசியில சீரியசா ஆகிப்போச்சு எல்லாரும் மன்னிக்கணும்.

* பின் குறிப்பு :


உங்க மேலாளர் கிட்ட இந்த பதிவ காட்டிராதிங்க !!!

வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்

ஒரு பணக்காரத்தந்தை தன் 12 வயது மகனை அழைத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றார்.

ஏழை மக்கள் படும் கஷ்டத்தை மகனுக்கு உணர்த்துவதற்காகவும்,அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை தனது மகன் அறிய வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிறப்புச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தார்.

இரண்டு வாரங்களுக்கு மேல் தந்தையும், மகனும் கிராமத்தில் வசித்தனர். வயல்வெளிகளிலும், நிலாவெளிச்சத்திலும் சுற்றித் திரிந்தனர். பின் குறிப்பிட்ட தினத்தில் தனது சொந்த இருப்பிடத்திற்கு திரும்ப வந்துவிட்டனர்.

வீடு திரும்பியதும் தந்தை மகனிடம் கேட்டார் - “சொல் மகனே!, இந்தச் சுற்றுலாவில் என்ன கற்றுக்கொண்டாய்?”.

அவரது எண்ணம் என்னவெனில், கிராமத்தைப் பற்றியும், மக்கள் படும் கஷ்டத்தையும் மகன் வாயால் கூறக் கேட்கவேண்டும் என்பதே.

மகன் சொன்னான் :

தந்தையே நாம் ஒரே ஒரு நாய்தான் வைத்திருக்கிறோம். அங்கே அந்த ஏழைகள் அவரவர் வீடுகளில் நான்கைந்து நாய்கள் வளர்க்கின்றனர்.

நம் வீட்டு நீச்சல் குளம் நமது தோட்டத்தின் எல்லைக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் நீந்துவதற்காக மிகப்பெரிய ஏரி, கண்மாய்கள் இருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றின் எல்லையை என்னால் காண இயலவில்லை.


நாம் இரவு வெளிச்சத்திற்காக நமது தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட குறிப்பிட்ட விலையுள்ள வண்ண அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் விலைமதிப்பே இல்லாத வானத்து நட்சத்திரங்களையும், வண்ண நிலவையும் இரவு வெளிச்சத்திற்காக உபயோகிக்கின்றனர்.

நாம் வாழ்வதற்காக மிகச் சிறிய நிலப்பரப்பையே வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் பரந்துவிரிந்த நீளமான வயல்வெளிகளையும், தோட்டங்களையும் வைத்திருக்கிறார்கள்.

நமக்கு வேலைசெய்வதற்காக நாம் வேலையாட்களை வைத்திருக்கிறோம். வேலையாட்கள் நமக்கு உதவுகிறார்கள். நாம்தான் யாருக்கும் உதவுவதில்லை.
ஆனால் கிராமத்து மக்களோ அடுத்தவர்களுக்கு உதவுவதிலும், பிறருக்குச் சேவைசெய்வதிலும் இன்பம் கொள்கிறார்கள்.

இவையனைத்தையும் கேட்டதும் பணக்காரத் தந்தைக்குப் பேச்சே வரவில்லை.

இறுதியாக மகன் சொன்னான் - “மிக்க நன்றி தந்தையே!. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எனக்குக் காட்டியமைக்கு நன்றி”.

நீதி :
பார்வையும், பார்க்கும் கோணமும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. தந்தையின் பார்வைக்கும், மகனின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
நம்மிடம் இல்லாதது வேறு ஒருவரிடம் இருக்கும். அவரிடம் இல்லாதது நம்மிடம் இருக்கும். ஆனால் எல்லோரிடமும் அன்பு மட்டும் இருந்தால் வாழ்வு மலர்ச்சியுடன் இருக்கும். நம்மிடம் இருப்பவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழும் வாழ்வே சிறப்பானது.

மணலில் எழுதிய எழுத்து

இணைபிரியாத நண்பர்கள் இருவர் பாலைவனம் வழியாக நடந்து சென்றனர். இருவரும் பயணத்தின் ஊடே பேசிக்கொண்டே சென்றனர். வாக்குவாதம் பலமாக இருந்தது. வாதம் மிக தீவிரமாகச் சென்றது. ஒரு நண்பனானவர் அடுத்தவனின் கன்னத்தில் அடித்து விட்டான்.வாக்குவாதத்தின் விளைவுதான் இதற்குக் காரணம்.

அடி வாங்கியவனுக்கு வலித்தது. அவன் மனம் துடித்தது. இருப்பினும் அவன் எதையும் சொல்லாமல் மவுனமாக அந்தப் பாலைவனப் பாதையின் மணலில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது கன்னத்தின் அடித்துவிட்டான்”.

அதன்பிறகு எதுவுமே பேசாமல் மேலும் வெகுதொலைவு நடந்து சென்றனர். அங்கே ஒரு பாலைவனச்சோலை (oasis) காணப்பட்டது. அந்தப் பாலைவனச்சோலையில் குளிக்கலாமென இருவரும் முடிவெடுத்தனர். குளித்தனர். திடீரென்று கன்னத்தில் அடிவாங்கிய நண்பனானவன் நீரில் மூழ்கிவிட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாது. ஆனால் சற்றுமுன் அவனை அடித்த நண்பன் இவனைக் காப்பாற்றிவிட்டான்.


உயிர்போகி உயிர் வந்தது நீரில் மூழ்கிப் பிழைத்தவனுக்கு. பிறகு அவன் அந்த நீர்க்கரையில் இருந்த ஒரு பாறையில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது உயிரைக் காப்பாற்றினான்”.

அவனைக் கன்னத்தில் அடித்தவனும், நீரில் இருந்து காப்பாற்றியவனும் கேட்டான் - “நான் உன்னை அடித்தவுடன் அந்த நிகழ்ச்சியை நீ மணலில் எழுதினாய். ஆனால் உன் உயிரைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை பாறையில் எழுதிவிட்டாயே?”.

உயிர்பிழைத்தவனும் அடிவாங்கியவனுமாகிய நண்பன் சொன்னான் - “யாராவது நமது மனதைப் புண்படுத்தும்படி நடந்துகொண்டால் நாம் அதை மனதில் எழுதிக்கொள்ளக் கூடாது. மணலில்தான் எழுத வேண்டும். மன்னிப்பு என்கிற காற்றானது மணலில் எழுதியவற்றை அழித்துவிடும்”.

“ஆனால் யாராவது நமக்கு உண்மையிலேயே நன்மை செய்திருந்தால் அதை மனம் என்கிற கல்லில்தான் எழுத வேண்டும். காற்று அதை எக்காலத்திலும் அழித்து விடாது. அப்போதுதான் பிறர் செய்த நன்மையானது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும்.”

நீதி : உங்களிடம் உள்ள செல்வங்களால் உங்கள் மதிப்பு எடை போடப்படுவது இல்லை. உங்களுக்கு உதவ முன்வருபவர்களைக் கொண்டே உங்களுடைய மதிப்பு எடை போடப்படும்.

Friday, March 13, 2009

பெண்கள் மென்பொருள் துறையில் பட்டையை கிளப்புவது எப்படி?

மத்த எல்லா துறைகளையும் விட மென்பொருள் துறைல பொண்ணுங்க அதிகமா வேலை செய்யறதுக்கு என்ன காரணம்னு ரொம்ப நாளா சிந்திச்சிருக்கேன். பதில் தெரியவே இல்லை. சரி யாரை கேக்கலாம்னு யோசிக்கும் போது மென்பொருள் துறைல யார் யார் வந்தா எப்படி எப்படி வேலை செய்வாங்கனு அந்த துறையை புரிஞ்சிருக்கறவரும், பொண்ணுங்க மனசை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கறவருமான நம்ம அட்லாஸ் சிங்கம் ச்சின்னப்பையனை கேட்டுடலாம்னு ஒரு ஃபோனை போட்டேன்.

ச்சி.பை : என்னப்பா வெட்டி எப்படி இருக்க?

வெ.ப: நல்லா இருக்கேண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?

ச்சி.பை: நான் என்ன உன்னை மாதிரி தங்கமணியை இந்தியாக்கா அனுப்பிருக்கேன். இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு டென்ஷனாக்காதப்பா.

வெ.ப: சரி சரி. எனக்கு ஒரு சந்தேகம். அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.

ச்சி.பை: எனக்கும் ஒரு சந்தேகமிருக்கு. தங்கமணியை இந்தியா அனுப்புவது எப்படினு ஒரு பதிவு போடேன். மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

வெ.ப: அண்ணே. அதை பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம். இப்ப எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம். அதை தீர்த்து வைங்க.

ச்சி.பை: சரிப்பா. சொல்லு.

வெ.ப: மத்த எல்லா துறையும் விட மென்பொருள் துறைல பெண்கள் அதிகமா இருக்கறதுக்கு காரணமென்ன?

ச்சி.பை: இது ஒரு நல்ல கேள்வி.

வெ.ப: பதிலை சொல்லுங்கண்ணே!

ச்சி.பை: இதுக்கு நான் பதில் சொல்றதை விட சில பல கேள்விகள் கேக்கறேன். அதுல இருக்குற சூட்சமத்தை புரிஞ்சிக்கிட்டா உனக்கே தானா புரிஞ்சிடும்.

வெ.ப: சரிண்ணே. கேள்வியை கேளுங்க

ச்சி.பை: சாப்ட்வேர்ல அதிகமா எல்லாரும் என்ன வேலை செய்வாங்க?

வெ.ப: டெவலப்பர்.

ச்சி.பை: டெவலப்பர்ஸ் அதிகமா என்ன செய்வாங்க?

வெ.ப: காப்பி பேஸ்ட்

ச்சி.பை: நதியா தோடு, குஷ்பூ ஜாக்கெட், சித்தி ராதிகா புடவை, கஜோல் சல்வார் இந்த மாதிரி பல ஐட்டம்ஸ் இருக்கு. ஆனா அஜித் சட்டை, விஜய் பேண்ட், சிம்பு பர்முடாஸ்னு ஏதாவது இருக்கா?

வெ.ப: இல்லையேண்ணே.

ச்சி.பை: இது தான் காப்பி பேஸ்ட்டோட துவக்கமே. இதுல யாரு எக்ஸ்பர்ட்னு புரியுதா?

வெ.ப: புரியுதுண்ணே.

ச்சி.பை: அது. அடுத்து என்ன வேலை அதிகமா செய்யறாங்க?

வெ.ப: டெஸ்டிங்

ச்சி.பை: அதுல என்ன பண்ணுவாங்க.

வெ.ப: எதுல என்ன தப்பு இருக்குனு கண்டுபிடிப்பாங்க.

ச்சி.பை: அப்படினா பொண்ணுங்க எல்லாம் பிறப்பாலே டெஸ்டர்ஸ் தான்பா. அவுங்களுக்கு எல்லாம் ட்ரெயினிங்கே கொடுக்க தேவையில்லை.

வெ.ப: எப்படினே சொல்றீங்க?

ச்சி.பை: மாமியார் மருமகள் பிரச்சனை, நாத்தனார் பிரச்சனையெல்லாம் தெரியாதா உனக்கு? இந்த மாதிரி மாமனார்- மருமகன் பிரச்சனைனோ, மாமன் மச்சான் பிரச்சனனோ ஏதாவது இருக்கா? ஒரு பொண்ணு கல்யாணமாகி வந்தா ஒரே நாள்ல அவள பத்தி ஆயிரம் Bugsஐ ஒரு மாமியாராலயும், நாத்தனாராலயும் ரிப்போர்ட் பண்ண முடியும். அதே மாதிரி மாமியார் நாத்தனாரை பத்தி ஆயிரம் Bugsஐ அந்த பொண்ணு ரிப்போர்ட் பண்ணும். ஆனா நம்ம பையனால ஒரு நாலு அஞ்சி பக்ஸ் கூட ரைஸ் பண்ண முடியாது.

வெ.ப: ஓ. அப்ப பொண்ணுங்க டெஸ்டிங்லயும் பட்டையை கிளப்புவாங்கனு சொல்றீங்க?

ச்சி.பை: நான் என்ன சொல்றது. உலகத்துக்கே அது தெரியும். அடுத்து என்ன வேலை அதிகமா பண்றாங்க?

வெ.ப: மெயிண்டனன்ஸ் ப்ராஜக்ட்

ச்சி.பை: அதுல என்ன செய்வாங்க?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச ப்ராஜக்ட்க்கு சப்போர்ட் பண்ணுவாங்க. ஏதாவது சின்ன சின்ன பிரச்சனை இருந்தா ஏற்கனவே பண்ணியிருந்ததுல கொஞ்சம் மாறுதல் செய்வாங்க. அதிகமான வேலை இருக்காது.

ச்சி.பை: இட்லி உப்புமானா என்னனு தெரியுமா?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச இட்லி மீந்துச்சுனா வீணாகாம இருக்க அதை கொஞ்சம் மாத்தி எல்லாரும் சாப்பிடற மாதிரி கொடுக்கறது.

ச்சி.பை: அதே அதே. நீ முன்னாடி சொன்னதும் கொஞ்சம் கொஞ்சம் அது மாதிரி தானே ;)

வெ.ப: அண்ணே. எங்கயோ போயிட்டீங்க. அடுத்து டேமஜர்.. சாரி சாரி மேனேஜர்

ச்சி.பை: அதுல எல்லாரையும் வேலை வாங்கனும். அப்படி தானே?

வெ.ப: ஆமாம்னே.

ச்சி.பை: இது நான் உனக்கு சொல்லி தான் தெரியனுமா? வேலை வாங்கறதுல பொண்ணுங்களை மிஞ்ச ஆள் இருக்கா? காலேஜ் படிக்க ஆரம்பிக்கும் போது பசங்க பொண்ணுங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கறானுங்க. அது கட்டைல போற வரைக்கும் கண்டினியூ ஆகுது. சரி தானே?

வெ.ப: ஆமாங்கண்ணே...

ச்சி.பை: போதுமா இல்லை இன்னும் ஏதாவது வேணுமா?

வெ.ப: பொதும்ணே.. பொதும். என் அறிவு கண்ணை திறந்து வெச்சிட்டீங்க... பொண்ணுங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியராகற திறமை பை பர்த்தே இருக்குனு புரிய வெச்சிட்டீங்க.

ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.

வெ.ப: இதெல்லாம் நீங்க சொல்லனுமா? என்ன மக்களே. ரெடி தானே? கும்மி அடிக்கின்ற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?

Healthy Life A to Z

A to Z

Air

காற்று நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது நன்கு வீட்டினுள் வர ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். குறிப்பாக, படுக்கை அறையில்… பாதுகாப்பையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

Breathe

நன்கு ஆழ்ந்து சுவாசியுங்கள். குறிப்பாகக் காலையில் ஆழ்ந்து மூச்சுப் பயிற்சி செய்யவும். இளமையைப் புதுப்பிக்கும் எளிய வழி இது.

Chill

கடும் குளிரும் கடுமையான வெப்பமும் இடர்களை உண்டாக்கும். முடிந்தவரை இவையிரண்டையும் தவிர்த்து, அன்றாட வாழ்வை ஒழுங்குபடுத்தி வாழுங்கள்.

Dwell

தூய்மையான இடத்தில் வாழுங்கள். அசுத்தமான வீடுகளில் வசிப்பதால் உடல் நலத்திற்கு எளிதில் தீங்கு உண்டாகும்.

Eat

வாழ்வதற்காக உணவு உண்ணுங்கள். உண்பதற்காக வாழ்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள்.

Fly

ஈக்களும் பிற பூச்சியினங்களும் தூய்மையைக் கெடுக்கும். கொசுக்கள் நோய் நுண்மங்களை காற்றில் பரப்பும். இந்த இரண்டும் உங்கள் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Getup

அதிகாலையில் எழுந்துவிடுங்கள். இதனால் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆர்வத்துடன் தொடங்கி வாழலாம்.

Herbs

உடலுக்கு நன்கு ஊட்டம் தரத்தக்கவை மூலிகைகள், பழங்கள், காய்கறிகள். அதாவது இயற்கை உணவுவையே உட்கொள்ளுங்கள். செயற்கை உணவைத் தவிருங்கள்.

Illness

பெரும்பாலும் கவனமின்மையால்தான் நோய்கள் தாக்குகின்றன. ஆறுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவ செக்கப் செய்து கொள்வது நல்லது.

Jogging

காலையோ அல்லது மாலையோ மெல்லோட்டம் செல்வது உடற்கட்டை நன்கு பராமரிக்க உதவும். (மெல்லோட்ட நேரம் : 30 நிமிடங்கள்)

Keep

உலகில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடியது தூய்மை. தினமும் குளியுங்கள். தூய்மையான ஆடைகளையே எப்போதும் அணியுங்கள். சுத்தமாக வாழுங்கள்.

Laugh

மகிழ்ச்சியாக வாழுங்கள். கஷ்டங்களின் போது தன்னம்பிக்கையுடன் மனம்விட்டுச் சிரியுங்கள். சிரிப்பு கஷ்டங்களைத் துரத்தும்.

Meditate

ஆழ்ந்து சிந்தித்து வெல்லவும், உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கவும் தினமும் தவறாமல் தியானம் செய்யவும்.

Nicotine

ஒரு போதும் புகைபிடிக்காதீர்கள். சிகரெட்டினால் ஒரு சிறு நன்மையும் இல்லை. வலிந்து நச்சு வலையில் விழாதீர்கள்.

Overweight

அதிக எடை ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான உணவு, உடற்பயிற்சி முதலியவற்றால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மாரடைப்பைத் தவிருங்கள்.

Province no meat

இறைச்சி உணவுகள் உங்கள் உணவுத்தட்டில் இடம் பெறவே கூடாது. இவை நஞ்சு மிகுந்த உணவுகள்.

Quietness

ஒரு நாளில் இருபது நிமிடங்களாவது பரபரப்பு இல்லாமல் அமைதியாகவும் ஓய்வாகவும் இருங்கள். இதனால் நரம்புமண்டலம் சிறப்பாக இயங்க போதுமான அளவு ஓய்வும் இணக்கமும் நரம்புகளுக்கு கிடைக்கின்றன.

Resist

மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்போதும் சீராக இருக்கும். எப்போதும் நேர்மையான செயல்களை மட்டுமே கவனமாகச் செய்து வந்தால் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். குறுக்கு வழிகள் தான் மன அமைதியைக் கெடுக்கின்றன.

Think

நம்மிடம் உள்ள செல்வத்தைவிட உயர்ந்தது நமது உடல்நலம்தான். எனவே, உங்கள் உடல்நலம் பற்றி சிந்தித்து அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப வாழுங்கள்.

Ulcer

மதுபானங்கள் அருந்தாதீர்கள். கவலைப்படாதீர்கள். இரண்டும் வயிற்றில் புண்களை உண்டாக்கும்.

Value

மருத்துவ ஆலோசனைகளின் மதிப்பை உணர்ந்தால், அவற்றைப் பின்பற்றினால் எல்லாவிதமான நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

Wisdom

உண்மையான அறிவு நமக்குத் தேவை. இதுவும், ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும்.

X-Ray

உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் பிரச்னைகளையும் நோய்களையும் எக்ஸ்ரேயும், உங்களின் இரத்தம், சிறுநீர் போன்ற பரிசோதனைச்சாலை முடிவுகளும் தெள்ளத்தெளிவாக வெளியே காண்பித்தருளும். எனவே, இதுபோன்ற நவீன பரிசோதனைகளைத் தவிர்க்காதீர்கள்.

You are

உங்கள் வேலைகளுக்குச் சமமாக தூங்கும் நேரமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடின உழைப்புத் தேவை. அதற்காக அடிப்படை ஓய்வைத் தவிர்க்க வேண்டாம்.

உடல்நலத்தில் அக்கறை கொள்ளாவிடில் எதையும் செய்யாத ‘பிறந்தோம் வாழ்ந்தோம்’ என்ற ஒன்றுமே இல்லாத, பூஜ்யமாக நம் வாழ்க்கை முடிந்துவிடும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

Thursday, March 12, 2009

சாப்ட்வேர் மக்களுக்கு ரஜினியின் பஞ்ச்

ரஜினியின் பஞ்ச் வசனங்கள் - டானிக். சாப்ட்வேர் மக்களுக்கு ஒரு ஸ்பூன்.


பக் எப்ப வரும், எப்படி வரும்ன்னு யாருக்கும் தெரியாது
ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும்

-----

நீ விரும்புற ப்ராஜக்ட்ல ஓர்க் பண்ணுறத விட
உன்னை விரும்பற ப்ராஜக்டல ஒர்க் பண்ணினா
உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.

-----

கஷ்டப்படாம பிக்ஸ் பண்ணுற பக் க்ளோஸ் ஆகாது
அப்படி க்ளோஸ் ஆனாலும் ரீ-ஓபன் ஆகாம போகாது.

-----

ப்ரோமோஷன், ஹைக், ஆன்சைட்
இது பின்னாடி நாம போக கூடாது
இதெல்லாம்தான் நம்ம பின்னாடி வரணும்

-----

கை அளவு லாஜிக் எழுதினா, அது நம்ம காப்பாத்தும்
அதுவே கழுத்தளவு எழுதினா, அதை நாம காப்பாத்தணும்.

-----

மேனேஜர், ஃப்ரஷ்ஷரை ரொம்ப சோதிப்பான்
ஆனா கைவிட மாட்டான்.
எக்ஸ்பிரியன்ஷுக்கு நிறைய கொடுப்பான்
ஆனா கை விட்டுடுவான்.

-----

அசந்தா அடிக்குறது கவர்மெண்ட் பாலிஸி
அசராம அடிக்குறது சத்யம் பாலிஸி

-----

டெவலப்பர் டீம் போடுறது, லாஜிக் கணக்கு
டெஸ்ட்டர் டீம் போடுறது, டிஃபக்ட் கணக்கு
மார்க்கட்டிங் டீம் போடுறது, ப்ராஜக்ட் கணக்கு
மேனேஜ்மெண்ட் டீம் போடுறது, ரெவன்யூ கணக்கு
ஹெ.ஆர். டீம் போடுறது, தலை கணக்கு
சிஸ்.அட்மின் டீம் போடுறது, வலை கணக்கு
சேல்ஸ் டீம் போடுறது, விற்பனை கணக்கு
ரிசர்ச் டீம் போடுறது, கற்பனை கணக்கு
கூட்டி கழிச்சி பாரு! கணக்கு சரியா வரும்!

-----

லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்

அதிகமா பெஞ்ச்ல இருக்குற எம்ப்ளாயும்
அதிகமா லே-ஆஃப் பண்ணுற முதலாளியும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை.

Tuesday, March 10, 2009

படித்ததில் பிடித்தது...

ஒரு தொழிலதிபர் பசிபிக் கடலின் குறுக்கே நீண்ட தூரம் பறந்து கொண்டிருந்தார். விடுமுறை நாட்களுக்காக வீட்டிற்குச் செல்லும் ஒரு பையன் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தான். சுவைமிக்க மதிய உணவுக்குப் பிறகு பயணிகள் சிறு துயில் கொள்ளும் நேரம்! கடும் புயலும் காற்றும் வீசும் இடத்தைக் கடந்துக் கொண்டிருப்பதால் அனைவரையும் இடுப்பில் வார் மாட்டிக் கொள்ளுமாறு விமான ஓட்டுனர் ஆணையிட்டார். விமானம் மிகப் பெரிதாக இருந்த போதிலும் அது மோசமாக ஆடியது.

அந்தப் பையன் வேதனையுடன் அஞ்சி நடுங்கி அவருடைய தோளில் சாய்ந்து கொண்டான். அவரோ அவனுடைய தலையை அன்புடன் நீவி விட்டார். அஞ்சாதிருக்கும்படி அவர் ஆறுதல் ஊட்டினார்.

திடீரென விமானம் சாய்ந்ததால் சிறுவன்,“உங்களுக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டான்.

இல்லை... இது உண்மையான வேடிக்கை, உனக்கு இது ரசிக்கத்தக்கதாக - அனுபவிக்கத்தக்கதாகத் தோன்றவில்லையா? என்றார்.

சிறுவனிடத்தில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவனுடைய பயமும் பீதியும் அகன்றன. விமானம் சாயும் போதும், தள்ளாடும் போதும் அதை ரசித்துக் கீச்சொலியுடன் சிரித்து மகிழத் தொடங்கினான்.

தொழிலதிபர் அந்தச் சிறுவனுக்கு வாழ்க்கைக்கலையில் ஓர் அரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டார்!

கோழைகள் பலமுறை சாகின்றனர்.வீரனோ ஒரு முறை தான் சாகிறான்.” நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கை என்பது தான் உண்மை. ஆனால் அச்சத்தாலும், நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம்!

KILL FEAR BEFORE FEAR KILLS YOU

Friday, March 6, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்

எத்தனை கோபம் கொண்டாலும் அன்பான வார்த்தைகளால் சகலமும் மறந்து வாழ்க்கையோடு ஒன்றி பல விஷயங்கள் கற்றுத் தரும் உறவுகள் தாய், தந்தை, குழந்தைகள், உடன் பிறந்த/பிறவா சகோதரர்கள். திருமணம் என்ற உறவின் மூலம் மட்டுமே அறிமுகமானாலும் வற்றாத அன்பைப் பொழியும் உறவுகள் கணவர், மாமா, அத்தை , வசந்தா அண்ணி. கூட்டுப் புழுவாக இருந்து சிறகை விரிக்கும் நேரத்தில் அறிமுகமாகி நட்பாகி சிறகுகளின் பலத்தை புரிய வைத்த தோழி பாரதி என்று எல்லோருமே என்னைக் கவர்ந்தவர்கள்.

இந்த வட்டங்கள் இன்றி பலரின் மனதைக் கவருபவர்கள் உண்டு. காந்திஜியின் உண்மை, பாரதியின் வீரம், அப்துல் கலாமின் முயற்சி, ஒளவையின் புலமை, பல இன்னல்களைத் தாண்டி உறுதியோடு அரசியலில் இறங்கும் பெண்மணிகளின் உறுதி என்று உள்ளம் கவர்ந்தவர்கள் பலர் உண்டு.

நாம் வாழத் தேவை தன்னம்பிக்கை, பிற உயிர் வாழ அன்பு என்பது உறுதி. அப்படி என்னைக் கவர்ந்தவர்கள்:

அன்னை தெரசா






அன்னை செய்த சேவைகளை மறக்க முடியுமா?
தன்னலம் கருதாது பிறர் நலனுக்கு வாழ்ந்த
தாய் உள்ளத்தை நினைக்காமல் இருக்க முடியுமா?
நம்பிக்கை இழந்தோரின் நம்பிக்கையாக
வாழ்வை வெறுத்தோரின் தேவதையாக
எல்லோருக்கும் தாயாகத்
தாய்மையுடன்
வாழ்ந்த கருணை உள்ளத்தைப்
பணிவுடன் வணங்குகிறேன்!!


அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்


அமைதியின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை
நம்பிக்கையின் பலன் அன்பு
அன்பின் பலன் சேவை
சேவையின் பலன் அமைதி



ஹெலன் கெல்லர் & ஆன் சல்லிவன்



எனக்கு இவரைப் பற்றி என் பெண்ணின் பாடம் வழியாகத்தான் தெரியும். அவரைப் பற்றி கேட்ட பொழுது மெய் சிலிர்த்தது. எல்லாம் ஒழுங்காக இருந்தும் ஏதேனும் நாம் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறோம். சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர் ஹெலன் கெல்லர்.

சற்றே எண்ணிப்பாருங்கள் நீங்கள் எதையும் பார்க்கவோ, கேட்கவோ பேசவோ முடியாது. உணர்வுகள் மட்டுமே துணை. உங்களுக்கு "தண்ணீர்" என்று அப்படி புரிய வைக்கலாம்? நீங்கள் சொல்வதை மூன்றாமவ்ர் புரிந்து கொண்டார் என்று எப்படி அறிவீர்கள்? இந்நிலையில் இவருக்கு ஆசிரியராக வந்தவர் ஆன் சல்லிவன். ஹெலன் கையில் பொம்மை கொடுத்து அவள் கைகளில் "பொம்மை" என்று எழுதினார், கேக் கொடுத்து "கேக்" என்று எண்ணினார். எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை ஹெலன். அவர் கற்றுக்கொள்ள மறுத்தார். கற்றுத்தருகிறார்கள் என்று புரிந்தால் தானே? ஆனால் ஆன் நம்பிக்கை இழக்கவில்லை, கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் தண்ணீரை ஹெலன் மீது தெளித்து "தண்ணீர்" என்று எழுதினார் ஆன். அப்பொழுது தான் ஹெலனுக்கு தான் கற்பிக்கப்படுகிறோம் என்று புரிந்தது. "தண்ணீர்" என்று எழுத கற்றுக்கொண்டார். ஒவ்வொன்றையும் எப்படி எழுத வேண்டும் என்று வினவி கற்றுக் கொண்டார். சற்று நேரத்தில் 30 வார்த்தைகள் கற்றுக் கொண்டார். அதன் பிறகு விரல்களின் மூலமும், பேசுபவரின் உதட்டசைவுகளை விரல்களால் உணர்வதன் மூலமும், பிரெய்ல் மூலமும் தகவல் பரிமாறக் கற்றுக்கொண்டார்.

ஹெலன் கெல்லர் ‘நம்பிக்கை’ மட்டும் கொண்டு தடைக்கற்களை படிக்கற்களாக்கி சிறந்த எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் உருவானார். இருவரின் நம்பிக்கையயும் வியக்காமல் இருக்க முடியவில்லை. எதுவும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை தானே வாழ்வின் ஆதாரம்?

ஹெலன் கெல்லரின் பொன் மொழிகள்:

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.


நம்மால் அவர்கள் அளவு செய்ய முடியாவிட்டாலும் முடிந்தவரை அன்பு செலுத்துவோம். நம்பிக்கை என்பது நமக்கு மட்டும் இன்றி தடுமாறும் மற்றவருக்கும் அளித்து வாழ்வை இனிமை ஆக்கிடுவோம்.உள்ளத்து உணர்வுகளைப் பகிர உதவியதற்கு நன்றி ஜீவன்.

இப்பதிவை படிக்கும் எவரும் உங்களைக் கவர்ந்தவர்களை உங்கள் பதிவில் கூறுங்களேன்!!!

Thursday, March 5, 2009

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ - ’தல’ அஜித்

இப்ப எல்லா டீவிலயும் ஏதாவது ஒரு ப்ரோக்ராம் நடத்தி முடிஞ்சிடுச்சினா, உடனே சீசன் 2, சீசன் 3னு ஆரம்பிச்சி டார்ச்சர் பண்றானுங்க. அதான் சரி நாமலும் கவுண்டர்’ஸ் டெவில் ஷோ சீசன் 2 ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சரி யாரை இந்த ஷோவுக்கு கூப்பிடலாம்னு யோசிக்கும் போது போன ரவுண்ட்ல எஸ்கேப்பான ”தல”யை பிடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சரி நிகழ்ச்சிக்கு போகலாமா?

கவுண்டர் : வாப்பா அஜித். உட்காரு.

தல : உட்காரலாம். யார் வேணா உட்காரலாம். ஆனா நான் உட்காரணும்னா சூப்பர் ஸ்டார் நாற்காலில தான் உட்காருவேன்.

க : டேய் தல மண்டையா. நீ திருந்தவே மாட்டியா? இப்படி கேவலமா பேசறதுமட்டுமில்லாம உனக்கு சூப்பர் ஸ்டார் நாற்காலி வேணுமா. குசேலனுக்கு அப்பறம் அவரே அந்த நாற்காலில உட்காரதில்லையாம். சரி, நீ நின்னுட்டே பேசு. அப்பறம் அது என்னடா எப்ப பார்த்தாலும் கோட் போட்டுக்கிட்டே சுத்திட்டு இருக்க. காலைல கக்கூஸ்க்கு கோட் சூட் போட்டுட்டு தான் போகறயாம்.

தல : கோட் சூட். பில்லா படத்துல நடிச்சுதுக்கு காசுக்கு பதில் கிடைச்சது. கோட் சூட்.

க : ஓ அது தான் நீ கோட் சூட் போட்டு சுத்தறதுக்கு காரணமா. ஏன்டா பில்லா படத்துக்கு அப்பறம் ஸ்டைலா பேசறனு இப்படி பேசி கொல்லற. உன் ஸ்டைல்ல பேசுடா. அதை ரசிக்க தான் இங்க கூட்டமே

தல: அது! நான் பாத்து பாத்து பேசற வீட்டு மன்ஷனில்ல. தானா பேசற காட்டு மன்ஷன்.

க: டேய். ஸ்டாப் திஸ் பஞ்ச் டயலாக்ஸ். அப்பறம் அது என்னடா உன்னை எல்லாரும் தல, தலனு கூப்பிடறாங்க? ஏன் எங்களுக்கு எல்லாம் உடம்புக்கு மேல தல இல்லாம வாலா இருக்கு?

தல: சின் வயசுல என்ன எல்லாம் தறுதல தறுதலனு கூப்பிடுவாங்க. அது இப்ப ஷார்டா ஆகி தலனு எல்லாரும் கூப்பிடறாங்க.

க: ஓ இதுக்கு இப்படி ஒரு கேவலமான ஃபிளாஷ் பேக் இருக்கா? சரி விடு. அப்பறம் எல்லாரும் ஆரம்பத்துல கேவலமான படத்துல நடிச்சிட்டு அப்பறம் நல்ல படத்துல நடிப்பாங்க. நீ மட்டும் ஆரம்பத்துல நல்ல படத்துல நடிச்சிட்டு இப்ப கேவலமான படத்துல நடிக்கிற. அது எப்படிடா?

தல: ஏ! நான் ஒண்ணும் கேவலமான படத்துல நடிக்கல. எல்லாமே ஓப்பனிங்ல ரெக்கார்ட் பண்ணுது.

க: ஆமாண்டா. உன் ரசிகர்னு சுத்தற கூட்டம் எல்லாம் என்னுமோ ரெண்டாவது நாள் போனா டிக்கெட் கிடைக்காதுனு நினைச்சிக்கிட்டு முதல் நாளே போயிடறானுங்க. ரெண்டாவது நாள் தியேட்டர்ல ஈ ஓடுது. சரி, உனக்கு சனி பிடிச்சது சிட்டிசன் படத்துல தான். அங்க இருந்து நாம ஆரம்பிப்போம். அது ஏன்டா அந்த சிக்கி முக்கி கல்லு மோதுதே பாட்டுல அப்படி ஒரு காஸ்ட்யூம்ல நடிச்ச?

தல: வசுந்தரா தாஸுக்கு என்னைவிட பெரிய தொப்பைனு எல்லாரும் சொன்னாங்க. அதான் யாரோடது பெருசுனு மக்களே முடிவு பண்ணிக்கிட்டும்னு அப்படி ஒரு பாட்டு வெச்சோம். நான் தனி ஆள் இல்லை.

க: அது அந்த படத்தை பார்த்தாலே தெரியுது. அப்பறம் அந்த டயலாக் சொல்லி சொல்லி அன்லிமிடட் மீல்ஸ் நாலஞ்சி வாங்கி சாப்பிட்டதால தான் அப்படி ஆகிடுச்சி. சரி அது பரவாயில்லை, அந்த ரெட்னு ஒரு படம் நடிச்சியே. அது எப்படிடா அந்த மாதிரி ஒரு கொடுமை எல்லாம் நடிக்க முடியுது?

தல : ரெட். R for Revolution, E for Education, D for Development.

க: அதெல்லாம் இருக்கட்டும். அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ என்ன புரட்சி பண்ணிருக்கியா? இல்லை ஒழுங்கா பத்தாவதாவது பாஸ் பண்ணயா? இல்லை இந்த சமுதாய வளர்ச்சிக்கு உதவனியா? அதுல உனக்கும் எதுக்கும் சம்பந்தமில்லை. அப்பறம் ஏன் ராசா இந்த மாதிரி பில்ட் அப் எல்லாம்?

தல: !

க: அது சரி. அப்பறம் அது என்னடா ஆஞ்சனயானு ஒரு படம் நடிச்சியே? அந்த படத்துக்கும் பேருக்கும் என்னடா சம்பந்தம்? ஆஞ்சனெயர் என்னைக்குடா பொண்ணுங்க பின்னாடி பாவாடை, பஞ்சவர்ணம்னு பாட்டு பாடிட்டு போனாரு?

தல: அவன் மட்டும் கில்லினு பேர் வெச்சிட்டு கபடி ஆடலாம். என்னை மட்டும் கேள்வி கேக்கறீங்க?

க: டேய்! அவனே ஒரு குருவி மண்டையன். அவனோட ஏன்டா கம்பேர் பண்ணற? அப்பறம் அந்த ஜனானு ஒரு கொடுமை படம். அதுல நீ சாயந்தரம் கோட், சூட் போட்டு கண்ணாடி போட்டா யாருக்கும் உன்னை அடையாளம் தெரியாதா? அந்த காலத்துல MGR கூட ஒட்டு தாடி, மரூ எல்லாம் வெச்சிட்டு வருவாரேடா?

தல: அவன் மீசையை ட்ரிம் பண்ணிட்டு, கைல டேட்டு குத்திட்டு, கட் பணியன் போட்டு மார்கெட்ல ஆடனாவே தமிழ்நாட்டு போலிஸால கண்டு பிடிக்க முடியல. நான் கண்ணாடி போட்டு, கோட் சூட் போட்டிருக்கேன் என்னை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

க: டேய் பில்லா ரீமேக் மண்டையா, அந்த காலத்துல MGR, சிவாஜி, ரஜினி, கமல் போட்டியெல்லாம் மக்களை யார் அதிகமா எண்டர்டெயின் பண்றதுனு இருந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் யார் அதிகமா டார்ச்சர் பண்றதுனு போட்டி போடறீங்களேடா. அப்பறம் அது என்னடா காட் ஃபாதர் படத்துல, கடைசியா அப்பா செத்து காட் ஆகிட்டாரு, காட் ஃபாதர்னு சொல்லி முடிச்சீங்க?

தல: படத்துக்கு முதல்ல பேர் வெச்சாச்சி. அப்பறம் எப்படி யோசிச்சும் கதை வரலை. அதான் கடைசியா அப்பாவை சாகடிச்சி காட் ஃபாதர் ஆக்கிட்டோம்.

க: டேய் காட் ஃபாதர் மண்டையா. இந்த கொடுமையெல்லாம் காதுல கூட விழக்கூடாதுனு தாண்டா மரியோ புசோ செத்து போயிட்டாரு. சரி, அப்பறம் ”ஜி”னு ஒரு படத்துல நடிச்சியே. அதுக்கு அப்பறம் உன்னை எல்லாம் ஜினு தான் கூப்பிடுவாங்கனு அந்த டைரக்டர் கூட சொன்னாரே. அது என்னடா ஜி?

தல: எம்.’ஜி’.ஆர், ர’ஜி’னி, அ’ஜி’த் மூணு பேர்லயும் நடுவுல வர எழுத்து தான் ’ஜி’.

க: அட ச்சீ. இதுக்கு இப்படி ஒரு கேவலமான காரணம் இருக்கா? இந்த பேர் ஆராய்ச்சி பண்ற நேரத்தை கதை கேக்கறதுல பண்ணிருந்தா இந்நேரம் நீ எங்கயோ போயிருப்ப. அப்பறம் அது என்னடா ஆழ்வார் படத்துல சாமி வேஷம் போட்டு துப்பாக்கியால சுட்டுட்டு ”நான் கட்வுள்”, “நான் கட்வுள்”னு சொல்லிட்டு இருந்த?

தல: சாமி வேஷம் போட்டா அடையாளம் தெரியாதுனு தான் அப்படி போட்டேன்.

க: டேய் டேய்... ஏகன் மண்டையா, சாமி வேஷம் போட்டா அடையாளம் தெரியாதுனு சொன்னா ஒத்துக்கறோம். நீ சொல்ற “நான் கட்வுள்”, “நான் கட்வுள்” ஸ்லேங்கை வெச்சே சின்ன சூச்சூ கூட இது அஜித்னு கண்டுபிடிச்சிடுமே. தமிழ்நாட்ல, பேசறதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற ஒரே ஆள் நீ தானடா ராசா. அது எப்படி நீ பேசினா கண்டுபிடிக்காம போயிடுவாங்க? சரி நீ ஏன் அப்படி பேசனனு மக்களுக்கு தெரியும். நான் கடவுள் படத்துல நீ தொப்பையோட தலைக்கீழ நின்னா எப்படி இருந்திருக்கும்னு நீயே நினைச்சி பாரு. அந்த படமே காமெடி படம் ஆயிருக்காது? அதனால தான் பாலா வேண்டாம்னு சொல்லிட்டாரு. அது தெரியாம இப்படி “நான் கட்வுள்”, “நான் கட்வுள்”னு சொல்லிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?

தல: அது டைரக்டர் சொன்னது.

க: தப்பிச்சிட்டாண்டா. சரி இனிமே அந்த மாதிரி கேவலமான டைரக்டர் படத்துல எல்லாம் நடிக்காத. அப்பறம் இந்த பி.வாசு, பேரரசு, ராஜு சுந்தரம் கூட எல்லாம் சகவாசம் வெச்சிக்காத. சரியா?

தல: முழிச்சிட்டேன். தோ வரேன்.

க: டேய் தல மண்டையா. இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் பேசிட்டு இருந்தியா?

தல: ஏன்ணே நீங்க வேற? இது பஞ்ச் டயலாக். நான் பஞ்ச் டயலாக் பேசினா எல்லாமே காமெடியா போயிடுது.

க: டேய். இந்த ஸ்கிரின பாத்து பேசி மக்களை டார்ச்சர் பண்ணது போதும்டா. இனிமேவாது கதையை கேட்டு நடிச்சி மக்களுக்கு கொஞ்சம் நல்லது பண்ணுங்கடா. இல்லைனா அடுத்த தடவை நான் பேச மாட்டேன். என் கால் தான் பேசும்.

கவுண்டர் காலை தூக்க, தல எஸ்கேப் ஆகிறார்.

வேலை நல்லா பார்க்குறவனையும் தூக்கினா

தாண்டவன் தான் இந்த கம்பெனிக்கு சி.இ.ஓ. முதலாளி. டெய்லி பிராஜக்ட் மேனேஜர்களுடன் மீட்டிங் போடுவாரு.

தாண்டவன் : ஏலேய் கணேசு? உன் பிராஜக்ட் ரெவன்யூ எவ்ளோ?

கணேஷ் : ரெண்டு கோடி

தாண்டவன் : எத்தனை உருப்படிக?

கணேஷ் : பத்து

தாண்டவன் : ராஜேசு, உன் ரெவன்யூ எவ்ளோ?

ராஜேஷ் : மூன்றரை கோடி

தாண்டவன் : உருப்படிக?

ராஜேஷ் : பதினைஞ்சு.

தாண்டவன் : முருகா, உன்னுது?

முருகன் : அஞ்சு கோடி முதலாளி. உருப்படிக, பத்துதான்.

தாண்டவன் : பாத்துக்கோங்கடா. அவன் மூத்... அவன் பிராஜக்ட் எக்ஸிக்யூஷன் ஸ்டைல பார்த்தாவது திருந்துங்க.

கணேஷ் : முதலாளி, அவன் உருப்படிக எல்லாம் புது டெக்னாலஜிஸ் தெரிஞ்சவிங்க. எங்ககிட்ட உள்ளவிங்களுக்கு ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது. சீக்கிரம் வந்தாலும் மெயில் செக் பண்ணவும், பிளாக் படிக்கவுமே நேரம் சரியாயிருக்கு. நாங்க என்ன பண்ணுறது?

தாண்டவன் : ஏலேய்! அதிகம் பேசுனா தொண்டைய கடிச்சு துப்பிருவேன். உன் பிரச்சினைக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன்.

------

அம்சவல்லி கேண்டினில் அமர்ந்து ஐ-பாடில் பாட்டு கேட்டுக்கொண்டே பிரெட் சாண்ட்விட்ச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

“ஏ! அம்சவல்லி... இப்பத்தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுறீயா?”

கேட்டது நாயர். கேரளாவில் இருந்து வந்திருந்தாலும், நன்றாக தமிழ் பேசுவான்.

“ஆமாம் நாயர். நீ?”

“நான் வீட்டுப்பக்கமே சாப்பிட்டுட்டேன். அப்புறம் வேல எப்படி போகுது?”

“வேல ரொம்ப. நிறைய பேர ரிலீஸ் பண்ணிட்டு, என்னை, ஒரு ஆளை வச்சி வேல வாங்குறாங்க. உனக்கு?”

“அதான், உனக்கு தெரியுமே? பழைய பிராஜக்ட் மேனேஜர் கூட ஒரு பிரச்சினை. பிராஜக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணிட்டாங்க. இப்ப பெஞ்ச்ல தான் இருக்கேன். மூணு மாசமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். இப்ப புது ப்ராஜக்ட்ஸ் ரொம்ப கம்மி. என்ன பண்றதுன்னே தெரியலை.”

“ம்ம்ம்... சீக்கிரம் ஏதாவது ஒரு ப்ராஜக்ட பிடி”

“என்ன பொழப்போ?”

”பொருளாதாரம் எகிறி துள்ளுனாலும், குப்புற அடிச்சு விழுந்தாலும், அத நம்ம வேலையை வச்சுதான் சொல்லுறாங்க. அவனவனுக்கு உள்ள கஷ்டங்கள் எல்லாத்தையும் வயித்தெரிச்சலா கொட்டிக்க நம்ம வேலை இருக்குங்கறது நாம பண்ணின புண்ணியம்தானே?”

-----

ஈவ்னிங் மெயில் செக் பண்ணிட்டு இருக்கும்போது, மொபைல் அடித்தது.

“ஹலோ”

“ஹலோ. நாயரா? நான் ருத்ரன் பேசுறேன். HR பில்டிங்ல இருந்து.”

“சொல்லுங்க”

“கொஞ்சம் இங்க வர முடியுமா?”

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ருத்ரன் முன்பு அமர்ந்திருந்தான் நாயர்.

“நீங்க மூணு மாசமா பெஞ்ச்ல இருக்கீங்க?”

“ஆமாம். ப்ராஜக்ட் தேடிட்டு இருக்கேன்.”

”உங்க மேனேஜர்க்கிட்ட இருந்து வந்திருக்குற ஃபீட்பேக் சரியா இல்ல”

“...”

“எங்களுக்கு வேற வழி இல்லை. ஸாரி. நீங்க வெளிய வேலை தேடிக்கோங்க.”

“ஸார்”

-----

“அம்சவல்லி, எப்படி இருக்கீங்க?”

திடீரென்று கூப்பிட்டு கேட்பதால் குழப்பமாக பார்த்தாள், அம்சவல்லி. ருத்ரன் தொடர்ந்தார்.

“உங்களுக்கே தெரியும்? உலக பொருளாதார நெருக்கடி பத்தி”

???

“அதுல உங்க கிளையண்டும் பாதிக்கப்பட்டு இருக்காங்க. பிஸினஸை முடிச்சிக்க சொல்லி கம்யூனிக்கேஷன் அனுப்பி இருக்காங்க.”

“சார். ப்ராஜக்ட் நல்லாதானே சார் போச்சு. நான் நல்லாதானே சார் ஒர்க் பண்ணினேன்”

அம்சவல்லி கண் கலங்கி இருந்தாள்.

”அதுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எமோஷனலாகாதீங்க. இன்னும் ரெண்டு வாரத்துல வேற வேலை பார்த்துக்கோங்க.”

-----
வேலை பாக்காதவனை தூக்கினா, அது பெர்ஃபாமன்ஸ் டஸ் நாட் மீட் த எக்ஸ்படேஷன்.

வேலை நல்லா பார்க்குறவனையும் தூக்கினா, அது க்ளோபல் ரிசஷ்சன்.

Tuesday, March 3, 2009

ஓர் துறவி இப்படி செய்யலாமா?

குருவும் சிஷ்யனும் பயணத்தில் இருந்தார்கள். சன்யாச தர்மத்தை கடைப்பிடிப்பதால் பிச்சை எடுக்க ஒரு பாத்திரம் மற்றும் ஒரு மாற்று உடையுடன் பயணத்தில் இருந்தார்கள்.

வழியில் ஒரு ஓடை குறுகிட்டது. அதை கடக்க இருந்த பாலம் பழுது பட்டிருந்தது. இருவரும் அதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் பொழுது அழகிய மங்கை ஒருவள் அங்கு வந்தாள்.
பாலம் பழுது பட்டிருப்பதை கண்டு வருத்தம் கொண்டாள். துறவி இருவரையும் பார்த்து, " தெய்வீகமானவர்களே அவசரமாக அக்கரைக்கு செல்ல வேண்டும். எனக்கு உதவி செய்ய முடியுமா?" என கேட்டாள்.

உடனே குரு சிறிதும் தாமதிக்காமல் அவளை தோள்களில் சுமந்து கொண்டு ஓடையில் இறங்கி மறுகரையில் சேர்த்தார். இச்செயல் சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருவரும் பயணத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்துக்கு பின் குரு சிஷ்யனை கண்டார். பெருத்த யோசனையுடன் வரும் சிஷ்யனிடம் கேட்டார் "மகனே ஏன் இந்த யோசனை? வாழ்க்கையிலும் சரி வழிப்பயணத்திலும் சரி மனதில் கணம் இருந்தால்
பயணம் ருசிக்காது. சொல் என்ன உனக்கு பிரச்சனை?"

"எனது குருவே நாம் துறவி அல்லவா? அந்த பெண்ணை நீங்கள் தோளில் சுமந்து எப்படி சரியான செயலாகும் ?" என்றான் சிஷ்யன்.

சிஷ்யனை ஆழமாக பார்த்த குரு தொடர்ந்தார். ...
"உனது கேள்வியால் மகிழ்தேன். எனது சிஷ்யா , அப்பெண்ணை நான் சில நிமிடம் தான் தோளில் சுமந்தேன் ஆனால் நீயோ அவளை நெடுந்தொலைவு மனதில் சுமந்து கொண்டு வருகிறாயே இது மட்டும் முறையா? சன்யாசம் என்பது பற்றற்று மனதில் தூய்மையை சிறிதும் இழக்காமல் இருப்பதே ஆகும்.."

மனதில் இருந்த மங்கையை இறக்கி வைத்து பூரணத்துவம் அடைந்தான் சிஷ்யன்.

----------------------ஓம்------------------

இந்த கதையை படித்ததும் இது எல்லாம் நடைமுறையில் நடக்குமா? அல்லது சுவாரசியத்துக்காக புனயப்பட்டதா என சந்தேகம் உதிக்கலாம்.

பழங்கலம் முதல் இந்த கதை வழக்கத்தில் இருந்தாலும், இது குரு-சிஷ்யனுக்கு இடையே நடந்த உண்மை சம்பவமாகும்.

உண்மை சம்பவத்தை விவரிக்கிறேன் .....

ரிஷிகேஷ் எனும் ஆன்மீக பூமி.
மாலை நேரத்தில் கங்கை நதி ஓரமாக தெய்வீகமாக கட்சி அளித்தது ஆனந்த குடீரம்...

சத்சங்கம் முடிந்ததும் சன்யாசிகள் சூழ நடை பயிற்சியில் ஈடுபட்டார் குருநாதர்.
அந்த குழுவில் ஒரு தாயும் மகளும் தவிர அனைவரும் ஆண் சன்யாசிகள்.

அனைவரும் ஆசிரமத்தை விட்டு சிறிது வனப்பகுதில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த விபரீதம் நடந்தது. தாயுடன் வந்த அந்த இளவயது மகள் திடீரென "ஐயோ" என கதறி கீழே விழுந்தாள். அவளை தேள் ஒன்று தீண்டிருந்தது..

தனது மகளுக்கு நேர்ந்த துன்பத்தை கண்ட தாயும் கதறி அழ துவங்கினார். சன்யசிகளோ என செய்வது என திகைத்து நின்றனர்.

குருநாதர் அங்கு நடப்பதையும் தனது சிஷ்யர்களின் செயல்பாட்டையும் கவனித்து கொண்டிருந்தார்.

சில சன்யாசிகள் ஆசிரமம் சென்று கட்டை மற்றும் கயிறுகளை கொண்டுவந்து அதில் அப்பெண்ணை கொண்டு செல்லலாம் என திட்டமிட்டனர். மேலும் சிலர் வேறு வழிமுறைகளை ஆலோசித்தனர்.

இதனிடையே ஒரு சன்யாசி விரைந்து வந்து அந்த கன்னி பெண்ணை தூக்கி தோளில் போட்டுகொண்டு காட்டுப்பாதையில் விரைவாக பயணித்து ஆசிரம மருத்துவமனையில் சேர்த்தார்.

சில காலத்துக்கு ஆசிரமம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. கன்னி பெண்ணை எப்படி சன்யாசி தொட்டு தூக்கலாம் என பேசினார்கள். ஆனால் இதை குருவும், அப் பெண்ணை தூக்கிய சிஷ்யரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

சில மாதங்கள் சென்றன. ..

ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ஒரு நாய் நோய்வாய்ப்பட்டது. உடல் முழுவதும் சொறியும், சீளுமாக காட்சியளித்தது. நோய்வாய்ப்பட்ட நாயை கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல யாரும் முன்வரவில்லை. உடனே அந்த சன்யாசி ஒரு துணியால் அந்த நாயை எடுத்து வாகனத்தில் வைத்து மருத்துவ மனைக்கு செல்ல உதவினார்.

சத்சங்கத்தில் குரு கூறினார். .."எனது சிஷ்யனுக்கு கன்னி பெண்ணும் , நோயுற்ற நாயும் ஒன்றுதான். சன்யாசம் ஆன்மாவில் இருக்கவேண்டும், மனதில் அல்ல."

இந்த உண்மை சம்பவத்தில் வரும் குரு : சுவாமி சிவானந்தர் - www.dlshq.org
சிஷ்யன் : சுவாமி சச்சிதானந்தா - www.swamisatchidananda.org

கல்யாணம் ஆவதற்கு முன்

கல்யாணம் ஆவதற்கு முன்

(படிக்க மேலிருந்து கீழ்)

He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: No! Don’t even think about it.
She: Do you love me?
He: Of course! Over and over!
She: Have you ever cheated on me?
He: No! Why are you even asking?
She: Will you kiss me?
He: Every chance I get.
She: Will you hit me?
He: Are you crazy! I’m not that kind of person!
She: Can I trust you?
He: Yes.
She: Darling!

கல்யாணம் ஆன பின்

(படிக்க கீழிருந்து மேல்)

என்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க....

நான் பாட்டுக்கு சிவனேனு தான் இருந்தேன்..கடைசியா போய்ட்டு வந்த கம்பனி பிக்நிக் அப்புறம், என்னை வேலையில் இருந்து தூக்க முடிவு பண்ணிட்டாங்க..
பிக்னிக்ல சரக்கு அடிக்கலாம் ணூ சொன்னாங்க..

ஆனா...
ஒரு கப் தான் குடிக்குனும்னு சொன்னாங்க..

சரி நமக்கு வாய்ச்சது அவ்ளோ அவ்ளோ தான்னு நானும் ஒதுக்கிட்டேன்..

நான் தான் கப் ஆர்டர் பண்ணேன்..

அப்புறமா பிக்னிக்ல சரக்குக்கு செலவு ஆன காசு பட்ஜெட் விட 100 மடுங்கு அதிகம் ஆயிடுச்சுணு சொன்னாங்க..
அது எப்படி ஒரு கப் மட்டும் குடிச்சா செலவு அதிகம் ஆகும்னு நீங்க நினைக்கலாம்..
அத்த கண்டுபிடிக்க ஒரு கமிடீ வைச்சு , நான் தான் இதுக்கு எல்லாம் காரணம்னு சொல்லி என்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க....
கப்புக்கு ஆர்டர் குடுத்தது தப்பா???
மக்களே நீங்களே சொல்லுங்க..
நான் என்ன பாவம் செஞ்சன் ..
இந்த கொடுமைய வரலாற்றில் பதிவுசெஞ்சு எனக்கு நியாயம் கிடைக்க நீங்க தான் செய்யணும்..

(ஏனா வரலாறு ரொம்ப முக்கியம் )

இந்த கொடுமைக்கு தான் என்னை தூக்கிட்டாங்க..

^

^

^

^

^

^

^

பக்கா கணிணிப் பொறியாளர் Vs பக்கா குடும்ப விளக்கு

ஈ-மெயிலில் படித்தது. பகிரலாம் என்று நினைத்தேன் :)

கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர்
மனைவி: பக்கா குடும்ப விளக்கு
கணவன்: அன்பே, வந்துட்டேன்
மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?
கணவன்: BAD COMMAND OR FILE NAME.
மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?
கணவன்: ABORT,RETRY,IGNORE.
மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?
கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.
மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.
கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.
மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.
கணவன்: DATA TYPE MISMATCH.
மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.
கணவன்: BY DEFAULT.
மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: HARD DISK FULL.
மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?
கணவன்: UNKNOWN VIRUS DETECTED.
மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?
கணவன்: TOO MANY PARAMETERS.
மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.
மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!
கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.
மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.
கணவன்: SHUT DOWN THE COMPUTER.
மனைவி: நான் போறேன்.
கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR கம்ப்யூட்டர்

அன்புள்ள அப்பா

தன் மகளின் அறையை கடந்தபோது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய, சட்டென நின்றார் அருள். உற்று நோக்கிய போது, எப்போதும் இல்லாமல் அறை மிக சுத்தமாக இருந்தது. எல்லாப் பொருட்களும் அதனதன் இடங்களில் இருந்தன. ஏதோ நெருட அறைக்குள் சென்ற அருளின் கண்களில் தலையணை மீது இருந்த கடிதம் தென்பட்டது.
'
அன்புள்ள அப்பாவுக்கு' என்று அதில் எழுதியிருந்தது. சற்றும் தாமதிக்காமல் கடிதத்தை பிரித்து படிக்கலானார்

அன்புள்ள அப்பா,
இதை மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன். உங்களை பிரிவதில் எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது, ஆனால் வேறு வழியில்லை. நான் வீட்டை விட்டு போகிறேன். உங்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை. ஆமாம்பா, நான் என் காதலன் வெற்றிசெல்வனுடன் இந்த ஊரை விட்டு போகிறேன்.

வெற்றியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவரும் என்னை மிகவும் காதலிக்கிறார். சந்திக்கும் போது உங்அளுக்கும் அவரைப் பிடிக்கும். கைலி கட்டிக்கொண்டு, அழுக்குச்சட்டையுடனும் முரட்டு தாடியுடனும் அவர் காட்சியளித்தாலும் மிகவும் பாசமானவர். அது மட்டும் இப்போ காரணமில்லை அப்பா, நான் இப்போது கருவுற்று இருக்கிறேன். வெற்றிக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், நான்கு குழந்தைகளும் இருந்தாலும், இந்த குழந்தையையும் கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஐம்பது வயதில் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதில் பெருமிதம் அவருக்கு.

வெற்றி ஒரு காட்டில் தான் வாழ்கிறார். அதிகம் பணம் இல்லையென்றாலும் கஞ்சா வளர்த்து நிறைய செல்வம் சேர்க்கலாம் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், சீக்கிரமே எய்ட்ஸீக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டால் அதை வெற்றிக்காக வாங்கவும் அந்த பணத்தை நாங்கள் பயன்படுத்திகொள்வோம்.

எனக்கு 16 வயதாகிறது அப்பா. என்னால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. கவலைக்கொள்ள வேண்டாம். சீக்கிரமே உங்கள் பேரக்குழந்தைகளுடன் உங்களை காண வருவேன்.

உங்கள் அன்பு மகள்,
இளவேனில்

படப்படப்புடன் படித்துக்கொண்டிருந்த கடிதத்தில் 'திருப்புக' என்று எழுதியிருந்ததையும் கவனித்தார் அருள். புரட்டிப்பார்த்த போது அதில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது

அப்பா,
நீங்கள் படித்தவற்றில் எதுவும் உண்மையில்லை. நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ மோசமான விசயங்கள் நடக்கலாம் என்று உங்களுக்கு நினைவுகூறவே அந்தக்கடிதத்தை எழுதினேன். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மேசை மீதிருக்கும் என் தேர்வு அறிக்கை எவ்வளவோ மேல் என்று தோன்றலாம். அதை பார்த்துவிட்டு, கையொப்பம் இடலாம் என்று தோன்றினால் என்னை அழைக்கவும். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா