Tuesday, March 10, 2009

படித்ததில் பிடித்தது...

ஒரு தொழிலதிபர் பசிபிக் கடலின் குறுக்கே நீண்ட தூரம் பறந்து கொண்டிருந்தார். விடுமுறை நாட்களுக்காக வீட்டிற்குச் செல்லும் ஒரு பையன் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தான். சுவைமிக்க மதிய உணவுக்குப் பிறகு பயணிகள் சிறு துயில் கொள்ளும் நேரம்! கடும் புயலும் காற்றும் வீசும் இடத்தைக் கடந்துக் கொண்டிருப்பதால் அனைவரையும் இடுப்பில் வார் மாட்டிக் கொள்ளுமாறு விமான ஓட்டுனர் ஆணையிட்டார். விமானம் மிகப் பெரிதாக இருந்த போதிலும் அது மோசமாக ஆடியது.

அந்தப் பையன் வேதனையுடன் அஞ்சி நடுங்கி அவருடைய தோளில் சாய்ந்து கொண்டான். அவரோ அவனுடைய தலையை அன்புடன் நீவி விட்டார். அஞ்சாதிருக்கும்படி அவர் ஆறுதல் ஊட்டினார்.

திடீரென விமானம் சாய்ந்ததால் சிறுவன்,“உங்களுக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டான்.

இல்லை... இது உண்மையான வேடிக்கை, உனக்கு இது ரசிக்கத்தக்கதாக - அனுபவிக்கத்தக்கதாகத் தோன்றவில்லையா? என்றார்.

சிறுவனிடத்தில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவனுடைய பயமும் பீதியும் அகன்றன. விமானம் சாயும் போதும், தள்ளாடும் போதும் அதை ரசித்துக் கீச்சொலியுடன் சிரித்து மகிழத் தொடங்கினான்.

தொழிலதிபர் அந்தச் சிறுவனுக்கு வாழ்க்கைக்கலையில் ஓர் அரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டார்!

கோழைகள் பலமுறை சாகின்றனர்.வீரனோ ஒரு முறை தான் சாகிறான்.” நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கை என்பது தான் உண்மை. ஆனால் அச்சத்தாலும், நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம்!

KILL FEAR BEFORE FEAR KILLS YOU

No comments:

Post a Comment