Monday, March 16, 2009

எயர்டெல் விளம்பரத்தால் ஏமார்ந்தேன்!
எயர்டெல்! பெயரைக் கேட்டவுடனேயே ஞாபகத்துக்கு வருவது அதன் விளம்பரங்கள்தான். ஒவ்வொரு விளம்பரமும் ஒரு கவிதை. அதன் விளம்பரங்களுக்கு இந்தியர்கள் மட்டுமல்ல, இலங்கையில் இருக்கும் நானும், இன்னும் பலரும் அடிமை என்றுகூடச் சொல்லலாம்.

தமிழ்த் தொலைக்காட்சித்துறை பெரிதாக வழற்சியடையாத இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியத் தொலைக்காட்சிகள்தான் புகலிடம். இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளைக் காண்பதற்காகவே மாதம் அயிரம் ரூபாவரை செலவு செய்பவர்கள் இங்கு பலர். அதற்கு நானும் ஒன்றும் விதிவிலக்கல்ல.

அவ்வாறு இந்தியத் தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போது சிலசமயம் அதன் நிகழ்ச்சிகளைவிட அதில்வரும் விளம்பரங்கள் சுவாரசியம் மிகுந்ததாக இருந்துவிடும். அவ்வாறு நான் முதலில் ஈர்க்கப்பட்டது A.R.ரஹ்மான் வந்த எயர்டெல் விளம்பரத்தில்தான். அந்த விளம்பரமும், அதன் இசையும் காண்பவரைக் கட்டிப்போட்டு வைத்துவிடும். அதைத் தொடர்ந்து வந்த எயர்டெல்லின் விளம்பரங்களான தாத்தாவும் பேரனும் தொலைபேசியினூடு செஸ் விளையாடும் விளம்பரம், இந்திய, பாகிஸ்தான் சிறுவர்கள் முட்கம்பிகளுக்கிடையே காற்பந்து ஆடும் விளம்பரம், மற்றும் இப்போது காண்பிக்கப்படும் அந்தச் சிறுவன் தந்தையுடன் உரையாடும் விளம்பரம் போன்றவை மறக்க நினைத்தாலும் மறக்க முடியாதவை.

இவ்வாறு இந்திய எயர்டெல் விளம்பரங்களில் மூழ்கியிருந்த போதுதான் இலங்கையிலும் எயர்டெல் தனது சேவையை வளங்கப் போகிறது என்ற தகவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பத்தாவது நாள் அது தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டபோதும் அன்றே அதன் பரபரப்புத் தொடங்கிவிட்டது. இலங்கைத் தொலைக்காட்சிகளில் சாருக்கான் இலங்கையருக்குக் ஹலோ சொன்னார். இலங்கை கிரிக்கட் வீரர்குமார் சங்ககாரவும் தான் எயர்டெல்லுக்கு மாறிவிட்டதாகவும், அது மிகவும் சிம்பிளான பிளான் என்றும் கூறினார்.இதற்கெல்லாம் மேலாக ஒவ்வொரு எயர்டெல் முகவர் நிலையங்களுக்கு முன்னும் யாழ்ப்பாணத்துச் சங்கக் கடைகளில் நிற்கும் மக்கள் கூட்டத்தையெல்லாம் தொற்கடிக்கத்தக்கவாறு தமது இலக்கத்தை முன்பதிவு செய்யக் கியூ நின்றது கொழும்பிற்குப் புதிது.நானும் இந்தப் பரபரப்பால் ஈர்க்கப்பட்டும், ஏற்கனவே எயர்டெல் தனது இந்திய விளம்பரங்களால் ஏற்படுத்திய தாக்கத்தாலும் கம்பஸ்சில் ஓசியாகக் கிடைத்த சிம் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டேன். ( நாமதான் ஓசி என்றால் Oil லும் குடிப்பவர்களாச்சே!).

எயர்டெல் தனது சேவையை ஆரம்பித்தது. கட்டணங்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு குறைவாகவே இருந்தது. பரவாயில்லை என பழைய சிம்மை கழற்றிவிட்டு எயர்டெல் சிம்மை செருகினேன்.

Coverage எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதில் அழைப்பு எடுப்பதற்குள் சம்பந்தப் பட்டவரை நேரிலேயே சந்தித்துவிட்டு வந்துவிடலாம் போல் குதிரைக் கொம்பாக இருந்தது. Incoming முற்றிலும் இலவசம் என்றார்கள். ஆனால் அது வந்தால்தானே? யாரைக் கேட்டாலும் எனக்கு அழைப்பு எடுக்க முடியவில்லை என்றார்கள். கடுப்பானது எனக்கு. மறுபடியும் இப்போது பழைய சிம்தான். எயர்ரெல் என்னை ஏமாற்றிவிட்டது. என்னை மட்டுமல்ல, இன்னும் பல இலங்கையர்களையும்தான்.

ஒருவேளை அதன்மீது வைக்கப்பட்ட அளவுக்கதிகமான எதிர்பார்ப்பால் நிகழ்ந்த ஏமாற்றமாக இது இருக்கலாம். ஆனால் இந்தியாவின் சிறந்த ஒரு நிறுவனத்திடம் இப்படியான சேவைக்குறைபாடுகள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. காலப்போக்கில் இவை நிவர்த்தி செய்யப்படும் என்றாலும், மக்களின் ஆதரவை அது சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். இனி அது ஆரம்பிக்கும்போதிருந்த ஆதரவைப் பெற கடினமாக உழைக்கவேண்டும். இன்னும் சிறிது காலம் எடுத்திருந்தாலும் அது தனது வலையமைப்பை சீராக்கிவிட்டு தொடங்கியிருந்தால் இன்று இலங்கையின் முன்னணி வலையமைப்பாக இருந்திருக்கும். இன்று மூன்றாமிடத்துக்கு முட்டிமோதிக்கொண்டுள்ளது. எயர்ரெல் காற்றுள்ள போது தூற்றிக்கோள்ளத் தவறிவிட்டது.

முடிக்கமுதல் ஒரு பஞ்ச்…….

எயர்டெல்,… Add எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா Outgoing க்குத்தான் Antenna பிடிக்கவேண்டியிருக்கு…..

இந்த பஞ்ச்சை எனது நண்பனான Deva விடம் கூறி எப்ப‍டி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர் outgoing எல்லாம் நமக்குச் சரிவராது. நான் வேணா missed callஎன்று போடலாமா என்று கேட்டார்.

இது எப்படியிருக்கு?

No comments:

Post a Comment