Friday, March 13, 2009

பெண்கள் மென்பொருள் துறையில் பட்டையை கிளப்புவது எப்படி?

மத்த எல்லா துறைகளையும் விட மென்பொருள் துறைல பொண்ணுங்க அதிகமா வேலை செய்யறதுக்கு என்ன காரணம்னு ரொம்ப நாளா சிந்திச்சிருக்கேன். பதில் தெரியவே இல்லை. சரி யாரை கேக்கலாம்னு யோசிக்கும் போது மென்பொருள் துறைல யார் யார் வந்தா எப்படி எப்படி வேலை செய்வாங்கனு அந்த துறையை புரிஞ்சிருக்கறவரும், பொண்ணுங்க மனசை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கறவருமான நம்ம அட்லாஸ் சிங்கம் ச்சின்னப்பையனை கேட்டுடலாம்னு ஒரு ஃபோனை போட்டேன்.

ச்சி.பை : என்னப்பா வெட்டி எப்படி இருக்க?

வெ.ப: நல்லா இருக்கேண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?

ச்சி.பை: நான் என்ன உன்னை மாதிரி தங்கமணியை இந்தியாக்கா அனுப்பிருக்கேன். இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு டென்ஷனாக்காதப்பா.

வெ.ப: சரி சரி. எனக்கு ஒரு சந்தேகம். அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.

ச்சி.பை: எனக்கும் ஒரு சந்தேகமிருக்கு. தங்கமணியை இந்தியா அனுப்புவது எப்படினு ஒரு பதிவு போடேன். மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

வெ.ப: அண்ணே. அதை பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம். இப்ப எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம். அதை தீர்த்து வைங்க.

ச்சி.பை: சரிப்பா. சொல்லு.

வெ.ப: மத்த எல்லா துறையும் விட மென்பொருள் துறைல பெண்கள் அதிகமா இருக்கறதுக்கு காரணமென்ன?

ச்சி.பை: இது ஒரு நல்ல கேள்வி.

வெ.ப: பதிலை சொல்லுங்கண்ணே!

ச்சி.பை: இதுக்கு நான் பதில் சொல்றதை விட சில பல கேள்விகள் கேக்கறேன். அதுல இருக்குற சூட்சமத்தை புரிஞ்சிக்கிட்டா உனக்கே தானா புரிஞ்சிடும்.

வெ.ப: சரிண்ணே. கேள்வியை கேளுங்க

ச்சி.பை: சாப்ட்வேர்ல அதிகமா எல்லாரும் என்ன வேலை செய்வாங்க?

வெ.ப: டெவலப்பர்.

ச்சி.பை: டெவலப்பர்ஸ் அதிகமா என்ன செய்வாங்க?

வெ.ப: காப்பி பேஸ்ட்

ச்சி.பை: நதியா தோடு, குஷ்பூ ஜாக்கெட், சித்தி ராதிகா புடவை, கஜோல் சல்வார் இந்த மாதிரி பல ஐட்டம்ஸ் இருக்கு. ஆனா அஜித் சட்டை, விஜய் பேண்ட், சிம்பு பர்முடாஸ்னு ஏதாவது இருக்கா?

வெ.ப: இல்லையேண்ணே.

ச்சி.பை: இது தான் காப்பி பேஸ்ட்டோட துவக்கமே. இதுல யாரு எக்ஸ்பர்ட்னு புரியுதா?

வெ.ப: புரியுதுண்ணே.

ச்சி.பை: அது. அடுத்து என்ன வேலை அதிகமா செய்யறாங்க?

வெ.ப: டெஸ்டிங்

ச்சி.பை: அதுல என்ன பண்ணுவாங்க.

வெ.ப: எதுல என்ன தப்பு இருக்குனு கண்டுபிடிப்பாங்க.

ச்சி.பை: அப்படினா பொண்ணுங்க எல்லாம் பிறப்பாலே டெஸ்டர்ஸ் தான்பா. அவுங்களுக்கு எல்லாம் ட்ரெயினிங்கே கொடுக்க தேவையில்லை.

வெ.ப: எப்படினே சொல்றீங்க?

ச்சி.பை: மாமியார் மருமகள் பிரச்சனை, நாத்தனார் பிரச்சனையெல்லாம் தெரியாதா உனக்கு? இந்த மாதிரி மாமனார்- மருமகன் பிரச்சனைனோ, மாமன் மச்சான் பிரச்சனனோ ஏதாவது இருக்கா? ஒரு பொண்ணு கல்யாணமாகி வந்தா ஒரே நாள்ல அவள பத்தி ஆயிரம் Bugsஐ ஒரு மாமியாராலயும், நாத்தனாராலயும் ரிப்போர்ட் பண்ண முடியும். அதே மாதிரி மாமியார் நாத்தனாரை பத்தி ஆயிரம் Bugsஐ அந்த பொண்ணு ரிப்போர்ட் பண்ணும். ஆனா நம்ம பையனால ஒரு நாலு அஞ்சி பக்ஸ் கூட ரைஸ் பண்ண முடியாது.

வெ.ப: ஓ. அப்ப பொண்ணுங்க டெஸ்டிங்லயும் பட்டையை கிளப்புவாங்கனு சொல்றீங்க?

ச்சி.பை: நான் என்ன சொல்றது. உலகத்துக்கே அது தெரியும். அடுத்து என்ன வேலை அதிகமா பண்றாங்க?

வெ.ப: மெயிண்டனன்ஸ் ப்ராஜக்ட்

ச்சி.பை: அதுல என்ன செய்வாங்க?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச ப்ராஜக்ட்க்கு சப்போர்ட் பண்ணுவாங்க. ஏதாவது சின்ன சின்ன பிரச்சனை இருந்தா ஏற்கனவே பண்ணியிருந்ததுல கொஞ்சம் மாறுதல் செய்வாங்க. அதிகமான வேலை இருக்காது.

ச்சி.பை: இட்லி உப்புமானா என்னனு தெரியுமா?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச இட்லி மீந்துச்சுனா வீணாகாம இருக்க அதை கொஞ்சம் மாத்தி எல்லாரும் சாப்பிடற மாதிரி கொடுக்கறது.

ச்சி.பை: அதே அதே. நீ முன்னாடி சொன்னதும் கொஞ்சம் கொஞ்சம் அது மாதிரி தானே ;)

வெ.ப: அண்ணே. எங்கயோ போயிட்டீங்க. அடுத்து டேமஜர்.. சாரி சாரி மேனேஜர்

ச்சி.பை: அதுல எல்லாரையும் வேலை வாங்கனும். அப்படி தானே?

வெ.ப: ஆமாம்னே.

ச்சி.பை: இது நான் உனக்கு சொல்லி தான் தெரியனுமா? வேலை வாங்கறதுல பொண்ணுங்களை மிஞ்ச ஆள் இருக்கா? காலேஜ் படிக்க ஆரம்பிக்கும் போது பசங்க பொண்ணுங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கறானுங்க. அது கட்டைல போற வரைக்கும் கண்டினியூ ஆகுது. சரி தானே?

வெ.ப: ஆமாங்கண்ணே...

ச்சி.பை: போதுமா இல்லை இன்னும் ஏதாவது வேணுமா?

வெ.ப: பொதும்ணே.. பொதும். என் அறிவு கண்ணை திறந்து வெச்சிட்டீங்க... பொண்ணுங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியராகற திறமை பை பர்த்தே இருக்குனு புரிய வெச்சிட்டீங்க.

ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.

வெ.ப: இதெல்லாம் நீங்க சொல்லனுமா? என்ன மக்களே. ரெடி தானே? கும்மி அடிக்கின்ற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?

No comments:

Post a Comment