Friday, June 12, 2009

பெரியவர்களுக்கு முடி நரைப்பது ஏன்?

ஒரு நாள் அப்பாவிடம் வந்த ராமு, இப்படி கேட்டான். "பெரியவங்களுக்கு எல்லாம் முடி நரைக்கிறதே, ஏம்பா?"

"
ஒன்ன மாதிரி உருப்படாத பிள்ளைகளை பெத்தா, அப்படித்தான் முடி நரைக்கும்" எரிச்சலில் சொன்னார் அப்பா.

"
ஓஹோ, அதனால்தான் தாத்தாவுக்கு அவ்ளோ முடியும் நரைச்சுப்போச்சா" என்று கூறியபடி ஆதங்கத்துடன் அவன் நடையை கட்ட, நொந்து போனார் அப்பா.

இப்படி அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாக்கள் நிறைய வீடுகளில் உண்டு. சில சமயம் அப்பாக்கள் மீதான வெறுப்பை சரியான தருணம் பார்த்து உறவினர்களிடம் போட்டுக்கொடுக்கும் மகன்களும் உண்டு.

ஒருமுறை, வீட்டுக்கு வந்த தனது அலுவலக நண்பரிடம் வீட்டில் உள்ள தனது அதிகாரம் பற்றி 'கைப்புள்ள' வடிவேலு ரேஞ்சுக்கு 'பில்ட் அப்' செய்து பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

"
பொண்டாட்டி, புள்ளைங்கள எல்லாம் எப்பவுமே நம்ம கட்டுப்பாட்டுல் வெச்சிருக்கணும். நானெல்லாம் சொன்னா, என் பொண்டாட்டி நில்லுன்னா நிப்பா, உட்காருன்னா உட்காருவா. இல்லேன்னா தூக்கிப்போட்டு நாலு சவட்டி சவட்டிப் புடுவேன் ஆமா..." என்றபடி பீலா விட்டுக் கொண்டிருந்தார்.

இதை கவனித்துக்கொண்டிருந்த ராமு, விருட்டென அப்பாவிடம் வந்தான். 'அப்பா, அம்மா கூப்பிடுறாங்க" என்றான் சத்தமாக.

'
ஏண்டா...?" என்றார் அப்பா அதட்டலாக.

"
அம்மா, கொல்லைப்புறத்துல சேலை, துணிமணியெல்லாம் ஊற வைச்சிருக்காங்களாம். அதை துவைச்சிப் போட சொன்னாங்க... " என்று சொல்லிவிட்டு 'சட்'டென வெளியேற, அப்பா முகத்தில் ஈயாடவில்லை.

அப்பா, குழந்தைகளுக்கு இடையேயான உறவுமுறை பற்றி இதுபோன்ற நிறைய குட்டிக்கதைகள் சொல்லப்படுகின்றன. இவை எல்லாமே, அப்பா மீது மகனுக்கு சிறுவயதிலேயே தோன்றும் ஒரு வித மன வேறுபாட்டை உணர்த்துவதாகவே உள்ளன.

இவற்றை ஆரம்பத்திலேயே களைய தவறுவதன் விளைவு தான், இன்றைய காலக்கட்டத்தில் பெருகி வரும் முதியோர் இல்லங்கள்.

பெரும்பாலான அப்பாக்கள், நிஜத்தில் 'தவமாய் தவமிருந்து' படத்தில் சித்தரிக்கப்படும் ராஜ்கிரணை போலத்தான் மகன்களுக்காக தங்களது ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மகன்கள் இதை சினிமாவில் பார்த்துதான் தெரிந்துக் கொள்கிறோம்.

உண்மையை சொல்லைப்போனால், 'அம்மா' அமைதியே உருவான தெய்வம் என்றால், 'அப்பா' கொஞ்சம் கோபமும், கண்டிப்பும் கலந்த தெய்வம். தெய்வங்கள் எப்போதுமே தங்களது குழந்தைகளுக்கு நல்லதே செய்யும்; நல்லதே நினைக்கும்.

இந்த உண்மையை நாம் உணர்ந்து, தந்தையர் தினத்தில் மட்டுமல்லாமல் தினந்தோறும் தந்தையை போற்றுவோம், தந்தையை வணங்குவோம்.

வரும் காலத்தில் முதியோர் இல்லங்கள் இல்லாத ஓர் அன்பான சமுதாயத்தை படைப்போம்!

1 comment:

  1. ஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்
    ற பால குருக்கள் நிச்சயம் இருப்பார்கள் .

    அழகாகத் தொகுத்து அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.இரண்டே நிமிட வாசிப்பில்,குழந்தை மன இயல்,பெரியவர் பேணுதல்,கணவன் மனைவி கிவ் அண்ட் டேக் பாலிசி ,அனைவரது பார்வைக்கு முன் அவர்களின் ஆரோக்கியமான உறவு,என்ற அனைத்தையும் மெல்லிய நீரோட்டமாக ஓட விட்டிருக்கிறீர்கள்

    ReplyDelete