Showing posts with label நன்றி - யூத்புல் விகடன். Show all posts
Showing posts with label நன்றி - யூத்புல் விகடன். Show all posts

Thursday, May 28, 2009

நினைவுகள் அழிவதில்லை

பரந்து விரிந்த பல தூர
பசுமைப் புல்வெளியும்

பரவசப்படுத்தும் பல நூறு
பறவைகளின் பாடலும்

பதில் அளிக்கவே-எதிரொலியால்
பதில் அளிக்கவே படைக்கப்பட்ட பனை உயர மலைகளும்

பருவம் மாறினாலும்
பொய்க்காத தென்றலும்

பகலிலே பகைவனானாலும்
மாலையில் மயக்கும் மஞ்சள் வெயிலும்

பிரிந்த எவரையோ தேடும் நோக்கில்
துள்ளிப் பாயும் சிறு நீரோட்டமும்

பிரிந்த எதனையோ நினைத்து
பிரமையான என்னை அரவணைத்தன அன்று.

பதிலுக்கு நான் அவற்றை
அரவணைக்க நினைக்கையில்

இல்லாத ஒன்றை
ஏன் தேடுகிறாய் என
ஏ.சி அறையின் சுவர்கள்
ஏளனமாய் பார்ப்பதாய் உணர்கிறேன்-இன்று

நினைவுகள் அழிவதில்லையாம்-அவை
நெஞ்சில் அழியாதிருப்பதால் தான் நினைவுகளாகின்றனவோ!


நினைவுகளால் மட்டுமே
நகர்த்துகிறேன் வாழ்க்கையை
நிர்ப்பந்தத்தால்-அயல்நாட்டில